ஓட்டமாவடி -காவத்தமுனை விஷேட தேவையுடையோர் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் நலன் கருதி ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தின் சமூர்த்தி சமூக நலன் பிரிவின் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.
பாடசாலையின் தலைவர் எஸ்.எச். அறபாத் ஸஹ்வி தலைமையில் பாடசாலை ஆராதனை மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மவ்ஜுத் அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பொதுத் தலைவர் ஏ.எல்.பீர் முகம்மட்காஸிமி, ஓட்டமாவடி சமூர்த்தி முகாமையாளர் எம்.எல்.ஏ.மஜீத், பாடசாலை நிர்வாக உறுப்பினர்களான எம்.ஜே.எம்.இம்தியாஸ், எம் .அசனார், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எல். சியாத் மற்றும் சமூர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.என்.எம். சாஜஹான் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு கொடி விற்பனை மூலம் சேகரித்த நிதியின் மூலம் குறித்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதாக சமூர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.என்.எம் ஷாஜகான் தெரிவித்தார்.