தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர்தான் ராதிகா. அதேபோல சினித்துறையிலிருந்து சின்னத்துறையில் நடித்து அசத்தியவர் ராதிகா. உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிதான் மில்லியனர், இது ஹிந்தியில் க்ரோர் பனேகா க்ரோர்பதி என்று நடத்தப்பட்டது. இதுபோன்று பெண்களுக்கு மட்டுமான குவிஸ் நிகழ்ச்சியான கோடிஸ்வரி நிகழ்ச்சியை கலர்ஸ் தொலைக்காட்சியில் இந்தமுறை தொகுத்து வழங்கினார் ராதிகா.
தொடக்கம் முதலே ராதிகா தொகுத்து வந்த இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்திருந்தது. இந்நிலையில் இந்த வாரம் கௌசல்யா என்ற மாற்று திறனாளி பெண் போட்டியில் கலந்துகொண்டார். இவர் ராதிகா கேட்ட 15 கேள்விகளுக்கும் சரியான் பதிலை தெரிவித்து 1 கோடி பரிசை வென்றார்.
கௌசல்யாவுக்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழக முதலமைச்சரும் அவரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை நடிகரும், மநீம கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வெற்றிபெற்ற கௌசல்யாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -