பாக்தாத்தில் இருந்து தென்மேற்கே 62 மைல் தொலைவில் உள்ள கர்பலா என்ற நகரத்தில் நேற்று (சனிக்கிழமை) இரவு ஈரான் ஆதரவு போராட்டக் குழுவான பி.எம்.எஃப் (Popular Mobilization Forces (PMF) leader Taleb Abbas Ali al-Saedi) இன் தளபதி அப்பாஸ் அலி அல் சைதி சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் அல்-சைதி படுகொலை செய்யப்பட்டார் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பற்றிய கூடுதல் விபரங்கள் உடனடியாகக் கிடைக்கவில்லை.
ஈரான் ஆதரவுடைய PMF குழுவில் உள்ள ஒரு பிரிவான கர்பலா படைப்பிரிவின் தளபதியாக அல்-சைதி இருந்துள்ளார். இந்நிலையில் இந்தத் தாக்குதல் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு இராணுவத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஈரானிற்கும் அமெரிக்காவிற்கும் போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில் ஈராக்கில் மேலும் ஒரு தளபதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.