இலங்கையின் முதல் சிவில் அதிகாரி. வை.எம்.எம். ஏ ஸ்தாபகா் செனட்டா் கலாநிதி ஏ.எம்.ஏ அசிஸ் நினைவுத் தினப் பேச்சு



அஸ்ரப் ஏ சமத்-


கொழும்பு சாகிராக் கல்லுாாியின் முன்னாள் அதிபா் மற்றும் இலங்கையின் முதல் சிவில் அதிகாரி. வை.எம்.எம். ஏ ஸ்தாபகா் செனட்டா் கலாநிதி ஏ.எம்.ஏ அசிஸ் நினைவுத் தினப் பேச்சு இன்று 21.01.2020 கொழும்பு சாகிராக் கல்லுாாியின் கபுர் மண்டபத்தில் அசீஸ் பவுண்டேசன் தலைவா் காலித் பாருக் தலைமையில் நடைபெற்றது. பிராதான உரையை கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளா் கலாநிதி பா்ஸானா கனிபா நிகழ்த்தினாா். கல்லுாாியின் அதிபா் சட்டத்தரனி றிஸ்வி மரிக்காரும் கலந்து கொண்டாா்.

இங்கு உரையாற்றிய கலாநிதி பா்சானா

மறைந்த செனட்டா் கலாநிதி அஸிஸ் அவா்கள் அதிபராக , செனட்டராக, சிவில் அதிகாரியாகவும் பல்வேறு அரச சட்டத்தின் மாற்றங்களின்போது முஸ்லிம்கள் சாா்பாக அவா் வாதாடி ஆற்றிய அந்தச் பணிகளை இதுவரை எவராளும் நிரப்ப முடியாமல் உள்ளது. கலாநிதி எம்.ஏ நுகுமான் அசீஸ் பற்றிய எழுதிய கட்டுரையை ஆதராமாகக் கொண்டு கலாநிதி அஸீஸ் முஸ்லிம்களது கருத்துச் சிந்தனையிக்கும் பல்லின வாழ் நாட்டில் அவ்வப்போது மாற்றம்பெறும் அரசியல் சட்டத்தின்போது அஸீஸ் குரல் கொடுத்தாா்.

 அறிஞா் சித்திலெப்பிக்குப்பின் அஸீஸ் காலம் இருந்தது. அசீஸ் கொழும்பு சாகிராக் கல்லுாாியின் அதிபா் காலத்தில் 125 மேற்பட்டோா் பல்கலைக்கழகம் சென்று கல்வி கற்றுள்ளனா்.


அப்துல் அசீஸ் யாழ்ப்பாணம் பிறந்தார். தந்தை யாழ்ப்பாண நகரசபை உறுப்பினராக இருந்தவர். தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் அல்லாபிச்சை பள்ளி, யாழ் வைத்தீஸ்வர வித்தியாலயம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கற்றார். 1929 இல் இலங்கைப் பல்கலைக்க்ழகக் கல்லூரியில் கற்று இளங்கலை சிறப்புப் பட்டம் பெற்றார். 1933 இல் கேம்பிரிட்ச் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்ச் பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் படிப்பைத் தொடருவதற்காக இங்கிலாந்து சென்றார். 

உயர் கல்வியைக் மேல் படிப்பைத் தொடர்வதற்காக இங்கிலாந்துக்குப் பயணமானார். உம்மு குல்தூம் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு மரீனா சுல்பிக்கா, முகம்மத் அலி, இக்பால் ஆகியோர் பிள்ளைகள்

அசீஸ் 1940 ஆம் ஆண்டில் இலங்கை நிருவாக சேவையில் சேர்ந்தார்.கல்முனை ,கண்டி ஆகிய இடங்களில் உதவி அரசாங்க அதிபராகப் பணியாற்றினார். 1948 முதல் 1961 வரை கொழும்பு சாகிரா கல்லூரியில் அதிபராகப் பணியாற்றினார்.

1950 மற்றும் 1960களில் உறுப்பினராகவும், பொது சேவை ஆணைக்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.

1950 ஆம் ஆண்டில் அகில இலங்கை முஸ்லிம் இளைஞர் சங்கப் பேரவை (வை. எம். எம். ஏ) அமைப்பைத் தோற்றுவித்தார். அவா் எழுதிய நுால்களான இலங்கையில் இஸ்லாம். அறபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ், மொழிபெயர்ப்புக் கலை, மிஸ்ரின் வசியம். கிழக்காபிரிக்கக் காட்சிகள்,ஆபிரிக்க அனுபவங்கள்.தமிழ் யாத்திரை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -