லீடர் அஷ்ரப் வித்தியாலயம் இரு தங்கங்களை வென்றது.


அஸ்ஹர் இப்றாஹிம்-
ல்வி அமைச்சின் ஏற்பாட்டில் அகில இலங்கை ரீதியில் உள்ள பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில், அகில இலங்கை மட்டத்தில் இரு தங்கப் பதக்கங்களை வென்று சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஷ்ரப் வித்தியாலய மாணவர்கள் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

கடந்த 18 மற்றும் 19ம் திகதிகளில் நாவலப்பிட்டி ஜயதிலக மைதானத்தில் 72 பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களே இந்த வெற்றியை ஈட்டியுள்ளனர்.

பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ் அவர்களின் வழிகாட்டலில் பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் ஏ.ஜி.அஸ்ஹர் மற்றும் ஏ.என்.எம்.ஆபாக், ஏ.எம்.இஸட்.இஸ்றத் ஆகிய பயிற்றுவிப்பாளர்கள் உட்பட ஆசிரியைகளான திருமதி. லரீபா பாறுக், திருமதி. சுஹைனா பேகம் இஸ்திகார் நெறிப்படுத்தலில் இம்மாணவர்கள் பதக்கங்களைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கப் பதக்கம் வென்று பாடசாலைக்கு திரும்பிய அதிபர், ஆசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

இவ்வரவேற்பு நிகழ்வில் காரைதீவு பிரதேச சபை உதவி தவிசாளர் ஏ.எம்.ஜாஹிர், கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.ஏ.அஸீஸ் உட்பட பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -