திறந்த பல்கலைக்கழகத்தின் விரியுரையாளர் கலாநிதி ஏ.சந்திரபோஸ்
ஹட்டன் கே.சுந்தரலிங்கம்- பல்கலைக்கழகம் என்பது வெறுமனே க.பொ.த உயர்தர சித்தி பெற்றவர்களுக்கு உயர் கல்வியினை மாத்திரம் போதிக்கும் நிறுவனமாகவோ அல்லது பட்டத்தினை வழங்கும் நிறுவனமாகவோ யாரும் நினைத்துவிட கூடாது. ஒரு உயர்கல்வி நிறுவனம் எங்கு அமைந்திருக்கிறதோ அதனை சூழ உள்ள மக்கள் அதனை பலாபலன்களை அனுபவிப்தோடு தங்கியிருக்கும் சமூக நிலையினை அது மாற்றியமைக்கும். என இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினை விரியுரையாளர் கலாநிதி ஏ.சந்திரபோஸ் தெரிவித்தார்
மக்களுக்கு பயன் தரும் நான்கு நூல்களின் வெளியீட்டு விழாவும்,பல்வேறு துறைகளில் இச்சமூகத்திற்கு சேவையாற்றிய 482 பேருக்கு கௌரவிப்பு விழாவும் இன்று (04) ஹட்டன் சாராதா மஹால் மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் நான் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக பலகலைக்கழகத்தில் சேவையாற்றி வருகிறேன.; அந்த காலப்பகுதியில் மலையக மாணவர்களின் வருகை மிகவும் குறைந்த அளவிலேயே காணப்பட்டன.இதற்கு காரணம் அங்கு உள்ள வலையறைகளேயாகும்.இலங்கை இன்று இந்த அளவுக்கு வளரச்சியடைந்துள்ளது. என்றால் அது பாடசாலை கல்வியில் மாத்திரம் தங்கியிருக்கவில்லை. பல்கலைக்கழகங்களில் எடுக்கப்படுகின்ற திறமையான சில நல்ல முடிவுகளால் தான,; இன்று இலங்கை இந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது.
இலங்கை சுதந்திரம் அடைந்த பின் பெருபான்மை மக்களுக்கும் வடக்கிழக்கு மக்களும் எமது .இஸ்லாமிய சகோதரர்களுக்கு மாத்திரமே அந்த வாய்ப்பு கிட்டியுள்ளது.எமக்கு அந்த வாய்ப்பு ஏற்படாமையினால் நாம் இன்னமும் தங்கியிருக்கும் சமூகமாகவும்,பின் தங்கிய சமூகமாகவும் வாழ்ந்து வருகிறோம.; இன்று நாம் எதற்கெடுத்தாலும் மேலேத்தேய நாடுகளை குறிப்பிடுவதற்கு காரணம் அவர்களில் அதிகமான பல்கலைகழகங்கள் காணப்படுகின்றமையியால் அதிகமானவர்கள் கற்றவர்களாக இருக்கிறார்கள.; அதனால் அவர்கள் மிகவும் வசதியாகவும் நிம்மிதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்கிறார்கள்.
மேற்கு ஐப்ரோப்பிய நாடுகள் இன்று பிரமிக்க தக்க வளர்ச்சியினை அடைந்துள்ளன.ஜப்பானை பாரத்திருக்கின்றோம் மிகவம் பிரமிக்கதக்கதாக உள்ளது. அவர்களின் வாழ்க்கை முறையும் நன்றாக காணப்படுகின்றது.அவர்கள் உயர்தர தொழிநுட்ப வசதிகளை கொண்டுள்ளார்கள்.
இன்று அமெரிக்காவினை எடுத்து கொண்டால் 17 வயதிற்கும் 25 வயதிற்கும் இடைப்பட்ட சுமார் 70 சதவீமானவர்கள் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கிறார்கள.; இதனை உணர்ந்து அனைவரும் செயப்பட வேண்டும.; அவர் மேலும் தெரிவித்தார்.
அதே போன்றுதான் அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் காணப்படுகின்றன அதனால் அந்நாடுகளில் வாழ்பவர்களின் வாழ்க்கை தரம் உயர் மட்டத்தில் காணப்படுகின்றது.என தெரிவித்த அவர் மலையகத்தின் சனத்தொகை அடிப்படையில் பல்கலைக்கழகம் செல்பவர்களின் எண்ணிக்கையினை எடுத்து கொண்டால் வருடத்திற்கு சுமார் 8000 மாக இருக்க வேண்டும் ஆனால் வருடத்திற்கு சுமார் 30000 பேரில் 500 பேரே செல்கிறார்கள் இதற்கு பல காரணங்கள் காணப்பட்ட போதிலும் எமது பகுதியில் தனியான பல்கலைகழகம் ஒன்று இல்லாமையேயாகும்.என்றால் அது மிகையாகாது.இவ்வருடம் உயர்தர பரீட்சையில் ஹட்டன் ஹைலன்ஸ் மத்திய கல்லூரியில் 130 பேரும்,பொஸகோ கல்லூரயில் எழுவது கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் 59 பேருக்கும் பல்கலைக்கழக அனுமதி கிடைத்துள்ளது.ஆனால் இதில் எத்தனை பேர் உள்ளவாங்கப்படுவார்கள் என்பது தான் இன்றுள்ள கேள்வி ஆகவே எமது பிரதேசத்தில் மிக விரை பல்கலைக்கழகம் ஒன்றினை அமைக்க நீங்கள் அனைவரும் பங்குதாராக வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
பிரிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலகமும் அதன் பயன்பாடும்,கிராம அபிவிருத்தி திட்டம்,சிறுவர்கள் நூல்கள் இரண்டு ஆக மொத்தம் நான்கு நூல்களின் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன்; ஊடகம், ஆசிரியர்சேவை,சமூக சேவை,கல்வி மான்கள்,அதிபர் சேவை உள்ளிட்டு பல சேவைகளில் சமூகத்திற்கு சேவையாற்றிய சுமார் 482 பேர் இதன் போது கௌரவிக்கப்பட்டன..
இதில் வசந்தம் செய்தியாளர் க.சுந்தரலிங்கம்,ஊடகவியலாளர் ப.தங்கம் ஆகியோரும் இதன் போது கௌரவிக்கப்பட்டனர்.இதன் போது தமிழ் சிங்கள கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன்.ஏனைய பலருக்கு; நினைவச் சின்னங்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
இந் நிகழ்வின் போது இந்நிறுவனத்தினை சுமார் 30 வருடங்களுக்கு மேலாக கொண்டு நடத்தி சாதனை புரிந்த அதன் தலைவர் மைக்கல் ஜோக்கிம்,மற்றும் திட்டப்பணிப்பாளர் சந்திரசேகரன் ஆகியவர்களுக்கு மகத்தான கௌரவிப்பு இதன் போது வழங்கப்பட்டன.
இந்நிகழ்வுக்கு பிரிடோ நிறுவனத்தின் தலைவர் மைக்கல் ஜோக்கிம்,திட்டப்பணிப்பாளர்,சந்திரசேகரன்உட்பட இணைப்பாளர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.