திருகோணமலை மாவட்டத்திற்கான சுற்றாலத்துறை தொடர்பான திறன்விருத்தி மூலோபாய செயற்திட்டத்தின் கீழ், supreme Chef -2 உணவுத்திருவிழாஇந்நிகழ்வின் உத்தியோக பூர்வ ஆரம்ப நிகழ்வு இன்று (20) காலை 10.00 மணிக்கு திருகோணமலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்ட சுற்றாலத்துறை தொடர்பான திறன்விருத்தி மூலோபாய செயற்திட்டத்தின் பணிப்பாளர் எம். மதியழகன் தலைமையில் இது நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதி அனுசரணை உடன் " உள்வாங்கப்பட்ட வளர்சிக்கான திறன்கள் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம் " S4IG . (எஸ்.4 ஐ ஜி) அனுசரணை மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கி இருந்தது.
இந் நிகழ்வில் உல்லாச பயணிகளை கவரும் வகையில் பாரம்பரிய உணவுகள் மற்றும் அதனை தயாரிக்கும் முறை, பாரம்பரிய மருத்துவ முறைகள் , சிறு உற்பத்தி முறை போன்றன தொடர்பாக காட்சிப்படுத்தப் பட்டிருந்தது. குறித்த நிகழ்வு நாளை (21) வரை இடம் பெறவுள்ளது.