படங்கள் காரைதீவு நிருபர் சகா-
நேற்று காரைதீவில் தைப்பொங்கல் கடற்கரைகரப் பந்தாட்ட இறுதிப்போட்டி !
காரைதீவு விளையாட்டுக்கழகம் அமரர் வைரமுத்து நல்லரெத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாகவும் தைப்பொங்கல் தினத்தினை சிறப்பிக்கும் வகையிலும் ஏற்பாடு செய்து நடாத்திய போட்டிகள் இம்மாதம் 11ம்12ம்15 ஆம் திகதிகளில் காரைதீவு கடற்கரை பூங்கா அமைந்துள்ள பிரதேசத்தில் இடம்பெற்றன.கழகத் தலைவர் கி.சசிகரபவன் தலைமையில் இடம்பெற்ற இறுதிநாள் போட்டிகள் நேற்று(15) தைப்பொங்கலன்று காரைதீவுக்கடற்கரையில் வெகு சிறப்பாக இடம்பெற்றதுடன் பல்வேறு அதிதிகளும் கலந்து சிறப்பித்து கிண்ணங்களையும் வழங்கி வைப்பதையும் காணலாம்.
படங்கள் காரைதீவு நிருபர் சகா-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
படங்கள் காரைதீவு நிருபர் சகா-