பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவ தளபதியின் வேண்டுக்கோளுக்கிணங்க சிவனொளிபாதமலை பகுதியில் பதுளை மற்றும் கண்டி பகுதிக்கான இராணுவ பொருப்பாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் எதிரிசிங்க தலைமையில் 200ற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் சிரமதானப் பணியில் 23.01.2020 அன்று ஈடுபட்டனர்.
பொலித்தின். வெற்று பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் சுகாதாரத்திற்கு சீர்கேடான குப்பைகளை அகற்றும் பணி இடம் பெற்றது. இதன்போது, மத்திய மாகாணத்திற்கான மேஜர் ஜெனரல் லக்சிரி வடுகே, என பல இராணுவத்தினரும் கலந்துகொண்டனர்.
சேகரிக்கப்பட்ட குப்பைகள், பொலித்தீன், வெற்று பிளாஸ்டிக் போத்தல்கள் அனைத்தையும் மஸ்கெலியா பிரதேச சபையிடம் ஒப்படைத்தனர்.