கிழக்கு முன்னாள் முதல்வர் நஸிர் அஹமட்
சிறுபான்மை மக்களை அச்சுறுத்தம் வகையில் தொடர்ந்தும் பல்வேறு கருத்துகள் அரசதரப்பால் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இவை இனநல்லுறவுக்கு வழிகோலும் ஆரோக்கியமான கருத்துகளாக அமையவில்லை. புதிய அரசியல் அமைப்பை ஏற்ப டுத்துதல், 21,22 இலக்க சட்ட திருத்தங்களை கொண்டு வருதல் போன்றன இதற்கு கட்டியம் கூறி நிற்கின்றன. பெரும்பான்மைத்துவஆட்சி என்ற பிரதி விம்பமே விஸ்வ ரூபம் எடுப்பதை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களின் சமகால உரைகள் எடுத்துக் காட்டுகின்றன என கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் நஸிர் அஹமட் தெரிவித்துள்ளார்.
மட்டு.மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து அவரது அமைப்பாளர்களுக்கு மத்தியில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவித்ததாவது:-
சமகாலஅரசியல் களம், சிறுபான்மை மக்கள் ஆழமாகச் சிந்தித்து தமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என்பதனைக் கோடிட்டு காட்டி நிற்கின்றது. சிறுபான்மை சமூகங்கள் தமக்குள் ஒன்றித்த அரசியல் செயற்பாடுகளை முன்னெடு ப்பதும் தற்போதைய சூழலில் ஆரோக்கியமானதா என்ற கேள்வியை எழுப்பி விட்டு ள்ளது.
எனவே, சிறுபான்மை சமூகங்கள் தத்தமது அரசியல் செயற்பாடுகள் குறித்து விழிப் புணர்வுடன் செயலாற்ற வேண்டியது அவசியமாகின்றது. குறிப்பாக ஆட்சி அதிகாரத் துக்கான தத்தமது பிரதிநிதித்துவத்தை உரிய முறையில் வளப்படுத்திக் கொள்வ தற்கான வியூகங்களை வகுத்து செயற்படவேண்டும்.
இதிலும் முக்கியமாக முஸ்லிம் சமூகம் மிகவும் ஜாக்கிருதையாகச் செயற்பட வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தனித் துவம் என்பதை வேரறுத்து தகர்த்தும் வகையில் நமக்குள்ளேயே நச்சு விதைகள் தூவப்பட்டு வருவதையும் நாம் மறந்துவிடலாகாது.
தத்தமது சுயலாப அரசியலுக்காக இவ்வாறான பரப்புரைகளை நம்மவர்களில் சிலர்; மேற்கொண்டு வருவதும் குறிக்கப்பலானது. இத்தகைய சக்திகளை இனங்கண்டு புறமொதுக்கி நமது வளமான சக்தியை நாம் வலுப்படுத்த வேண்டியது காலத்தின் தேவை என்பதைக் கருத்தில் கொண்டு நாம் செயற்பட முன்வர வேண்டும்.
இன்று நமது மக்களுக்கான அபிவிருத்திப்பணிகள் எவ்வாறு முன்னெடுக்கப்படப் போகின்றன என்பது குறித்து நாம் நிதானமாகச் சிந்திச்செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம். எனவே தான் நாம் எமது மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண் டிய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கலந்துரையாடி வருகின்றோம். இதனாடாக பிரதானமானவற்றை இனங்கண்டு அதனை பெற்றெடுக்க நாம் திடசங்கற்பம் கொள்ள வேண்டும் - என்றார்.