அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் திருகோணமலை மாவட்ட கிளையினால் மொரவெவ பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மொரவெவ ஆரம்ப சுகாதார வைத்திய பராமரிப்பு நிலையத்தின் பொறுப்பதிகாரி டொக்டர் போல் ரொஷான் தலைமையில் இன்று (05) இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்டத்தில் மொரவெவ மற்றும் கோமரங்கடவல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பாடசாலை மாணவர்களை தெரிவு செய்து மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் இப்பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் டாக்டர் ஏ. லதாகரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களையும்
வழங்கி வைத்தார்.
இதேவேளை மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய டொக்டர் ஏ. லதாகரன் வறுமை என்பது கற்றல் நடவடிக்கைக்கு எவ்வித தடையும் இல்லை எனவும் இம்முறை விஞ்ஞான பிரிவில் திருகோணமலை மாவட்டத்திலேயே அதிகளவிலான புள்ளிகளை பெற்ற ஒரு மாணவி வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வந்ததாக தெரியவருகின்றது.
ஆனாலும் அந்த மாணவி வறுமையை சவாலாக எடுத்துக்கொண்டு கற்றல் நடவடிக்கைகளில் மிகவும் வேகமாக செயற்பட்டுவந்தமையினால் இப்போது அம்மாணவிக்கு அதிக அளவில் வரவேற்பு கிடைத்திருக்கின்றது.
இருந்தபோதிலும் நாங்கள் உங்களுக்கு ஊக்குவிப்பதற்காகவே இவ்வாறான செயற்பாட்டை செய்து வருகின்றோம்.
நீங்கள் எதிர்காலத்தில் சிறந்த ஒரு வைத்தியராக வரவேண்டும் அதுமட்டுமல்லாது சிறந்த ஒரு அரச உத்தியோகத்தராக வரவேண்டும் மக்களுக்கு தூர நோக்குடன் செயற்படக்கூடிய ஒரு அறிவாளியாக கிராம மட்டங்களில் உருவாக வேண்டும் எனவும் டொக்டர் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
இதன்போது அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாகத்தினர் உறுப்பினர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.