கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புதுவருட கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு.

எம்.ஐ.சர்ஜுன்-

2020 வருடத்திற்கான கடமைகளை ஆரம்பிக்கும் முகமாக, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு புதுவருட தினமான இன்று வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் உபவேந்தர் பேராசிரியர் எப்.சி.றாகல் தேசியக் கொடியினை ஏற்றிவைக்க, பல்கலைக்கழக பதிவாளர் ஏ.பகிரதன் பல்கலைக்கழக கொடியினை ஏற்றி வைத்தார். இதில் கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாக மற்றும் மட்டக்களப்பில் அமைந்துள்ள சௌக்கிய பராமரிப்பு பீடங்களைச் பீடாதிபதிகள், துறைத் தலைவர்கள், நிருவாக உத்தியோகத்தர்கள், கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் படை வீரர்கள் உள்ளிட்ட நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த சகலரையும் நினைவுகூர்வதற்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன் சகல பணித் தொகுதியினரும் அரசாங்க அலுவலர்களின் சத்தியம்/உறுதிமொழியினை வாசித்து கடமைகளை ஆரம்பித்ததுடன் மத தலைவர்களினது ஆசியுரைகளும் வழங்கப்பட்டது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -