ஹஸ்பர் ஏ ஹலீம்-
தோப்பூர் அல் ஹம்றா மத்திய கல்லூரியில் தரம் ஆறு புதிய மாணவர்களை வரவேற்கும் விழா இடம் பெற்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தோப்பூர் வட்டாரக் குழு தலைவர் முஜாஹித் தலைமையில் இன்று (06) நடைபெற்ற இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னால் துறை முகங்கள் கப்பற் துறை பிரதியமைச்சரும்,திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் அவர்கள் கலந்து சிறப்பித்தார். பாடசாலை மாணவர்கள் பாராளுமன்ற உறுப்பினரை உற்சாக வரவேற்பளித்தார்கள்.
பாடசாலை வளாகத்தில் இதன் போது மரம் நடும் நிகழ்வும் இடம் பெற்றதுடன் நாடாளுமன்ற உறுப்பினரால் மரம் நடப்பட்டது..
இதில் மூதூர் பிரதேச சபை உறுப்பினர்களான ஜெஸீலா குசைதீன்,றிபாஸ் ,வெருகல் பிரதேச சபை உறுப்பினர் ஸ்ரீகாந் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தோப்பூர் மத்திய குழுவின் தலைவர் அப்துல் றசாக் நளீமி உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தார்கள்..