காரைதீவுப் பிரதேச பொதுஜன பெரமுன (மொட்டு) கட்சியின் அமைப்பாளராக தியாகராஜா ஞானேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கான நியமனத்தைமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுன கட்சியின் பொத்துவில் தொகுதியின் பிரதம அமைப்பாளரும் கரையோர பிரதேச இணைப்பாளருமான பியசேன பெரும்புள்ளி ஹேவாகே நேற்று வழங்கிவைத்தார்.
காரைதீவில் பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளராக ஞானேந்திரனை நியமித்த கூட்டத்தில் அவர் கூறியதாவது கல்வி அஞ்சாமை துணிவுடமை கருணை மிகுந்த ஒருவரை பொதுஜன பெரமுன கட்சிக்கான காரைதீவின் அமைப்பாளராக நான் நியமிப்பதில் பெருமையடைகிறேன்.இவர் மாவட்டத்தில் ஏனைய பகுதிகளில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் நியமிப்பது போல் அவர்களின் வெற்றிக்கு பாடுபடும் கைக்கூலி அல்லஇ எமது காரைதீவு பிரதேசத்தின் குறைபாடுகளையும் இங்கே வாழும் மக்களின் குறைபாடுகளையும் எமது கட்சியின் தலமைப்பீடத்திற்கு எடுத்துரைத்து அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்த்து வைக்கும் உன்னத பணியே இவருடையதாகும்.இவரைப்பற்றி நான் உங்களிடம் மேலதிகமாக கூற வேண்டிய அவசியமில்லை மக்களின் நல்வாழ்வுக்காக உயிரை துச்சமாக மதித்து செயற்படக்கூடியவர் என்றால் அது மிகையாகாது.
அவ்வாறான மனித புனிதரைத்தான் இங்கே நியமித்துள்ளேன்.
தேவையில்லாமல் தங்கள் சுய நலத்திற்காக தேசியம் பேசிப்பேசியே தமிழ் மக்களை தேசாந்திரி ஆக்கிய கட்சி ஏறச் சொன்னால் எருதுக்கு கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்கு கோபம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உண்மையை சொன்னால் அதை வைத்துபிழைப்பு நடத்துபவருக்கு கோபம் மக்களை நேசிக்கும்மக்களின் நலம் விரும்பும் எவரும் ஒரு போதும் அந்த கட்சியில் இருக்கமாட்டார்கள்.
இவர்கள் மக்களுக்கு செய்த நன்மை எதுவுமில்லை ஆனால் தீமையோ எண்ணிலடங்காதுள்ளது. இனத்தை அழிக்க நினைக்கும் நயவஞ்சகர்களினது ஒட்டு மொத்த அமைப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இப்பொழுதே முதலாவது தரமான ஐப் பழுக்கற்ற தலைமையை இந் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் இதில் என் போன்ற சிலருக்கு உங்கள் போன்ற பலருக்கும் அளப்பெரிய பங்குண்டு நல்ல வேளை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பங்காளியாகவில்லை அவ்வாறு ஆகி இருப்பார்கள்ஆனால் தரங்கெட்ட செயல்திறனற்ற ஒரு உதவாத தலைமைகள் உருவாகி இருந்திருக்கும் நல்ல வேளையாக அவர்கள் நினைத்தது நடக்கவில்லை இது தான் நாம் செய்த பாக்கியம் எனவே இறைவன் நமக்கு தந்த வாய்ப்பை நாம் சரியாக பயன் படுத்த வேண்டும் கிட்டாதாயின் வெட்டென மற என்பது போல் தமிழினத்திற்கு எந்த நன்மையும் அற்ற சுய நலத்தில் ஊறிக்கொண்ட இவர்களை விடுத்து எம் மக்களை மீட்டெடுக்க அம்பாறை மாவட்டத்தின் பொதுஜன பெரமுன கட்சியின் தமிழ் பிரதிநிதித்துவத்தை வென்றெடுக்க நாம் திடசங்கற்பம் பூண வேண்டும்.
வாருங்கள் சமுதாயத்தில் மாண்டு போகும் மனித அன்பு அக்கறை ஆதரவினை மீட்போம் என்றார்