கல்முனை அல்-ஹாமியா அரபுக் கலாசாலையில் இருந்து இம்முறை க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய 32 மாணவர்களில் 31 பேர் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று, பல்கலைக் கழகம் மற்றும் கல்விக் கல்லூரிகளுக்கு தெரிவாகும் வாய்ப்பை பெற்றுள்ளனர் என்று கலாசாலையின் ஆழுநர் சபை ஊடகப் பேச்சாளர் தேசகீர்த்தி ஏ.அப்துல் கபூர் தெரிவித்தார்.
இவர்களுள் ஏ.ஆர்.எம்.அஸீம் எனும் மாணவர் மூன்று பாடங்களிலும் 'ஏ' சித்தியை பெற்றுள்ளதுடன் எம்.ஏ.றிஸ்வான், ஏ.எம்..அஸ்பாக் ஆகிய இரு மாணவர்கள் 2 'ஏ', 1 'பி' சித்திகளை பெற்றுள்ளனர்.
அல்-ஹாமியா அரபுக் கலாசாலையின் வரலாற்றில் இப்பெறுபேறுகள் மிகச்சிறந்த அறுவடையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.