ஈரானிய தளபதியை கொலை செய்ததன் மூலம் தான் ஒரு படுபயங்கரவாதி என்பதான மீண்டும் நிரூபித்த அமெரிக்கா.


முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது-

னக்கு விரும்பாத அல்லது தனக்கு சாவால் என்று கருதுகின்ற ஏனைய நாட்டு தலைவர்கள், இராணுவ தளபதிகள், புலனாய்வு அதிகாரிகள் ஆகியோர்களை கொலை செய்வது அமெரிக்காவுக்கு பழக்கப்பட்ட ஒன்றாகும்.

இது இன்று நேற்றல்ல, பல தசாப்தங்களாக இதனையே அமெரிக்கா செய்து வருகின்றது. இவ்வாறு கொலை செய்வதன் மூலம் ஏனைய நாட்டு தலைவர்களையும், இராணுவ தளபதிகளையும் அமெரிக்கா அச்சுறுத்தி வருகின்றது.

அந்தவகையில் ஈரானின் புரட்சிகர காவல் படையின் தளபதியான காசிம் சுலைமானி நேற்று காலை ஈராக்கில் வைத்து அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தினால் ஏவுகணை தாக்குதல் மூலம் கொலை செய்யப்பட்டார்.

ஈராக் அரசின் ராஜதந்திரியாக தளபதி சுலைமானி அழைக்கப்பட்டு பாக்தாத் விமான நிலையத்தில் வந்திறங்கிய பின்பு அவர் வரவேற்கப்பட்டு வாகனத்தில் ஏறும்போதே ஏவுகணை தாக்குதலை நடாத்தி தளபதி சுலைமானியை அமெரிக்கா கொலை செய்தது.

ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு வருகைதந்த ராஜதந்திரியை கொலை செய்ததை உலகம் வன்மையாக கண்டித்துள்ளது. உலகில் இதனைவிட பயங்கரவாத செயல் எதுவும் இருக்க முடியாது.

தனது உரிமைக்காகவும், இழந்த தனது நாட்டை மீட்பதற்காக போராடுகின்ற போராட்ட வீரர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துகின்ற அமெரிக்கா, தான் ஒரு படுபயங்கரவாதி என்பதனை இவ்வாறான தாக்குதல்மூலம் நிரூபித்துவருகின்றது.

தளபதி காசிம் சுலைமானி அவர்கள் புரட்சிகர காவல்படையின் தளபதியாக மட்டுமல்லாது, மத்தியகிழக்கிலும், ஏனைய இஸ்லாமிய நாடுகளிலும் அமெரிக்காவின் தேவையில்லாத தலையீடுகளுக்கும், ஆதிக்கத்துக்கும், அதன் பயங்கரவாத செயல்பாடுகளுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கையில் இறங்கியிருந்தார்.

இஸ்லாமிய நாடுகளுக்கு அச்சுறுத்தலாகவும், பயங்கரவாத நடவடிக்கையிலும் ஈடுபடுகின்ற இஸ்ரேல் என்கின்ற நாட்டை மத்தியகிழக்கில் இருந்து துடைத்தெறிய வேண்டும் என்பதில் இவர் உறுதியாக செயல்பட்டார்.

ஈரானின் ஆதரவுடன் செயல்படுகின்ற ஹிஸ்புல்லாஹ் அமைப்புக்கும் உதவி செய்வதில் நேரடியாக பங்காற்றி இருந்த சுலைமானி அவர்கள் ஈராக் உற்பட மத்தியகிழக்கில் இருக்கின்ற அமெரிக்க படையினர்களை வெளியேற்றுவதற்கான திட்டங்களை வகுப்பதற்கான மூளையாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகின்றது.

ஈரானிய தலைவரின் நம்பிக்கைக்கு பாத்திரமான தளபதி சுலைமானியின் இழப்பு ஈரானுக்கு மட்டுமல்லாது முழு இஸ்லாமிய உலகுக்கும் பாரிய இழப்பாகும். அது மட்டுமல்லாது இந்த தாக்குதல் அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கு பாரிய வெற்றியாக கருதப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -