ஜனநாயகக் கட்சியினர், அமெரிக்காவுக்கு மிகப்பெரிய அவமானம் என்கிறார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்

ராக்கில் வைத்து, ஈரான் தளபதி காசிம் சுலைமானியை கொன்றதற்கு எதிராக செயல்படும் ஜனநாயகக் கட்சியினர், அமெரிக்காவுக்கு மிகப்பெரிய அவமானமாக விளங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானிய படைத்தளபதியான சுலைமானி, பாக்தாத் நகரில் அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டதையடுத்து அமெரிக்கா-ஈரான் இடையே போர்ப்பதற்றம் உருவானது.

அதனையடுத்து, ஈராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரான் சரமாரியான ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்காமல் இருக்க டிரம்ப்பின் ராணுவ அதிகாரத்தை குறைக்கும் தீர்மானத்தை ஜனநாயகக் கட்சியினர் கொண்டு வந்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் அத்தீர்மானம் நிறைவேறினர்.

இதனையடுத்து டிரம்ப் இவ்வாறு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -