அவதானம் துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம்

யூ.கே. காலித்தீன்-
ற்பொழுது சாய்ந்தமருது தோணாவும் அதனை அண்டிய பகுதிகளையும் சுத்தம் செய்து அழகுபடுத்தும் வேலைத்திட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன. அத்தோடு இப்பகுதியில் வைத்தியசாலை வீதிப் பாலம், அல்ஹிலால் வீதிப் பாலம் மற்றும் மாளிகா வீதி அகிய மூன்று பாலங்களிலும் தினமும் காலைவேளையில் ஒவ்வொரு மணி நேரம் கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவு சேகரிக்கும் வாகனங்கள் தரித்து நிறுத்தப்பட்டு மக்களின் அன்றாட சமையலறைக் கழிவுகளை சேகரிக்க நேரசூசி அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள வாகனங்கள் சிலவேளைகளில் தாமதமாக வரக்கூடிய சந்தர்ப்பங்களும் உள்ளன அந்த வகையில் நேற்று மாளிகா வீதி பாலம் அருகில் ஐந்து நிமிடத் தாமதத்திற்குள் குப்பைகளை கொண்டுவந்தவர்கள் அவ்விடத்தில் குவித்து சென்ற சம்பவத்தை அவதானிக்க முடிந்தது.
எனவே வழங்கப்பட்டுள்ள இச்சேவையை துஷ்பிரயோகம் செய்து இதனையும் இல்லாமல் செய்துவிட வேண்டாம் உரிய நேரத்துக்கு தாங்கள் கொண்டு வந்தாலும் 5 அல்லது 10 நிமிடங்கள் தாமதித்து வாகனங்கள் வந்தாலும், அதனை கழிவகற்றும் வாகனங்களுக்குள் போட்டுவிட்டு செல்வது இச்சேவையை மேலும் தொடர்ந்து செல்ல வழிவகுக்கும். இல்லாமல் மீண்டும் பழைய நிலைக்கு இவ்விடங்களை குப்பை மேடாக்குவதற்கு நீங்கள் உறுதுணையாக வேண்டாம்.

கல்முனை மாநகர "A" வலயமான சாய்ந்தமருது பிரதேசத்திற்கான
நேர அட்டவணை பின்வருமாறு

காலை 6:30 முதல் காலை 7:30 வரை
வைத்தியசாலை வீதி பாலம் அருகிலும், காலை 6:30 முதல் காலை 7:30 வரை மாளிகா வீதி பாலம் அருகிலும், காலை 8:30 முதல் காலை 9:30 வரை அல் ஹிலால் வீதி பாலம் அருகிலும் திண்மக் கழிவு அகற்றும் வாகனம் தரித்து நிற்கும்
இச்சேவையோடு மாத்திரம் அல்லாது ஊருக்குள் தினந்தோறும் வருகின்ற வாகனங்களும் உரிய வீதிகளுக்கு உரிய தினங்களில் வந்து திண்மக் கழிவுகள் அகற்றும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்பதை தெரிவிப்பதோடு இச்சேவைகளை தொடர்ந்தும் செய்வதற்கு உதவியும் ஒத்தாசையும் புரிந்த கல்முனை மாநகர முதல்வர், ஆணையாளர், வட்டார உறுப்பினர்கள், மாநகர ஊழியர்கள், உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவருக்கும் பொதுமக்கள் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -