கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி, கோறளைப்பற்று வாழைச்சேனை ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட மீராவோடை, கறுவாக்கேணி ஆகிய வீதிகளுக்கு காபட் இடும் வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
குறித்த வேலைகளை சிறப்பாக நடாத்தி முடிப்பதற்கு அதிகாரிகள் அப்பகுதி மக்களிடம் ஒத்துழைப்புகளை வேண்டுகின்றனர்.
வீதிக்கு காபட் இடும் பணிகள் நடைபெறும் போது வீதியை மறித்து நாங்கள் வேலைகளை மேற்கொள்ளும் போது அதனை மீறி பாதசாரிகளும், வாகன ஓட்டுநர்களும் உள்நுழைந்து பயணிப்பதால் போடப்படும் காபடில் வாகன டயர்கள் பதிந்து வீதி சேதமடைவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் குறித்த பகுதிகளில் அமைந்துள்ள மதஸ்தளங்களின் ஒலிபெருக்கி மூலம் வீதி வேலைகளை சிறப்பாக மேற்கொள்ள பொதுமக்கள் ஒத்துழைப்புகளை வழங்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.