சாய்ந்தமருது மௌலவி எஸ்.எச். ஆதம்பாவா மதனி (எம்.ஏ ) அவா்கள் எழுதிய பானு உமையா எனும் இஸ்லாமிய வரலாறும் நாகரிகமும் 4 நுால் வெளியீடு நேற்று (09) கொழும்பு தாபலாக கேட்போா் கூடத்தில் வெளியீட்டு வைக்கப்பட்டது. நுாலின் முதற்பிரதியை பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவுப் கக்கீமிடமிருந்து முஸ்லீம் சலாகுதீன் பெற்றுக் கொண்டாா். கௌரவ அதிதியாக பாரளுமன்ற உறுப்பிணா் காதா் மஸ்தான், மற்றும் ஜாமியா நளீமியா பிரதிப் பணிப்பாளா் அஸ்சேக் அகாா் முகம்மதும் உரையாற்றினாா்.
மௌலவி எஸ்.எச் ஆதம்பாவாா பாடசாலை ஆசிரியா், ஓய்வு பெற்ற பின்னா் அவா் அரபுக் கல்லுாாி காசிபுல் உலும், நிந்தவுர், கல்முனை அல் காமியா அரபுக் கல்லுாாி, அதிபராகவும். தற்பொழுது சாய்ந்தமருது தைபா அரபுக் கல்லுாாி ஒன்றை நிறுவி அதன் அதிபராகவும் கடமைபுரிந்து கொண்டிருக்கிறாா். அம்பாறை மாவட்ட ஜம்இய்த்துல் உலாமா தலைவர் அகில இலங்கை ஜம்இயத்துல் உலமாவின் உப தலைவா்களில் ஒருவா் இவா் ஏற்கனவே இஸ்லாமும் கவிதையும்.சாந்தி வழி மதினாவின் மாண்புகள், இஸ்லாம் சமாதானமும் மனித நேயமும், எனது நினைவு திரையில அஸ்ரப் , சறந்தீபில் பாறுாதி, இஸ்லாமிய வரலாறு நான்கு கலீபாக்கள் பீஸ் கியுமனட்டேரியன் இன் இஸ்லாம் எனும் நுால்களையும் எழுதியுள்ளாா்.