சம்மாந்துறைப்பொலிஸ் நிலையத்திற்கு புதிதாக பொலிஸ்நிலையப்பபொறுப்பதிகாரியாக சுரந்த ஜயலத் நியமிக்கப்பட்டதைதொடர்ந்து அவர் சமுகத்திற்கு நன்மைபயக்கும் செயற்றிட்டத்திற்காக உடனடியாக களத்தில் இறங்கியுள்ளார்.
தமது ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தை தூய்மையாக சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்ற முன்னோக்குத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளார்.
அதன் ஆரம்பக்கட்டமாக நேற்றுமுன்தினம் (8) புதன்கிழமை காரைதீவு பிரதேசசபையுடன் இணைந்து பிரதான வீதிகள் உள்வீதிகளை சிரமதான அடிப்படையில் துப்பரவுசெய்யும் பணியிலீடுபட்டனார்.
காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையில் பொலிசார் ஊழியர்கள் இணைந்துகொண்ட இச்சுத்தமாக்கும் செயற்றிட்டத்தின்கீழ் பிரதானவீதியின்இருமருங்கிலுமிருந்தகழிவுகள் குப்பைகள் பூரணமாகச் சுத்தமாக்கப்பட்டது.
அங்கு தவிசாளர் கி.ஜெயசிறில் கூறுகையில்:
புதிய பொலிஸ்பொறுப்பதகாரியின் சமுகம்சார்ந்த இத்திட்டத்தை நாம் வரவேற்கிறோம். மேலும் பிரதானவீதியிலுள்ளகடைக்கரர்கள் மற்றும் வர்த்தகநிலையத்தினர்தமது குப்பைகளை உரியமுறையில் களஞ்சியப்படுதர்திஎமது கழிவகற்றும்பிரிவினரிடம் ஒப்படைக்கவேண்டும்.இன்றேல்சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றர்.
புதிய பொலிஸ்பொறுப்பதிகாரிஜயலத் கூறுகையில்:
எமது சம்மாந்துறைப்பிருதேசத்திற்குட்பட்ட காரைதீவில் இச்செயற்றிட்டத்தை முதன்முதலில்ஆரம்பித்துள்ளோம். தவிசாளர் பூரண ஒத்துழைப்பைவழங்கினார்.ஆனால் இருவரைத்தவிர பல உறுப்பினர்களை இங்குகாணவில்லை.அவர்கள்மக்கள்சேவகர்கள். கட்டாயம் இப்படியான நிகழ்வுகளில் கலந்துகொள்ளவேண்டும்.இதுதான் மக்கள்பணி.வெறுமனே அமர்வுகளுக்கு மட்டுமவந்து கொடுப்பனவைப்பபெறுவதுமட்டுமல்ல. என்றார்.