பகிடிவதையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிவாரணம் வழங்க குழு நியமனம்


ஐ. ஏ. காதிர் கான்-

ல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படும் பகிடிவதை காரணமாக, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கென குழுவொன்றை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல், தொடர்பாடல் தொழில்நுட்பம், உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 

இதன் அறிக்கை மூன்று மாத காலப்பகுதிக்குள் வழங்கப்படவுள்ளதாகவும், இதற்கான திட்டம் தற்போது வகுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார். 
 
உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூக், முன்னாள் உபவேந்தரான நாரத வர்ணசூரிய, பேராசிரியர் சங்கைக்குரிய மாகம்மன பஞ்ஞானந்த தேரர், கலாநிதி பெனட் சாந்த அடிகளார், கலாநிதி சந்திரா எம்புல்தெனிய மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி பிரசன்ன லால் டி அல்விஸ் ஆகியோர் அங்கத்தவர்களாகச் செயற்படவுள்ளனர். 

இதன் அமைப்பாளரும் செயலாளருமாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் திருமதி ஜனிதா லியனகே செயற்படவுள்ளார்.
 
இதேவேளை, கடந்த 5 வருட காலப்பகுதியில் பகிடிவதை காரணமாக பல்கலைக்கழகக் கல்வியைக் கைவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் பல்கலைக்கழகக் கல்விக்கான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் மாத்திரம் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களில் 2 ஆயிரம் பேர் பகிடிவதை காரணமாக, பல்கலைக்கழகக் கல்வியைக் கைவிட்டுள்ளனர்.

 இவர்கள் உள ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தல்களுக்குள்ளானமை இதற்கான காரணமாகும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -