காரைதீவு சகா-
கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றிவரும் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களுக்கு புத்தாண்டில் மகிழ்ச்சியான செய்தியொன்று வெளியிடப்பட்டிருக்கிறது.
அவர்கள் மாதாமாதம் வேதனத்திற்கு மேலதிகமாக பெற்று வந்த 1500ருபா விசேடகொடுப்பனவு புத்தாண்டிலிருந்து இரட்டிப்பாக அதாவது 3000ருபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் இந்த மகிழ்ச்சியான செய்தியை (20)வெளியிட்டார்.
இவ் அதிகரித்த 3000ருபா கொடுப்பனவு 2020.01.01இலிருந்து வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் பணியாற்றிவரும் சுமார் 450 ஆசிரிய ஆலோசகர்கள்இம்மாதம் முதல் இவ்வதிகரிப்பைப் பெற்றுக்கொள்ளவிருக்கிறார்கள்.
வடக்கில் இக்கொடுப்பனவு ஏலவே வழங்கப்பட்டுவந்தபோதிலும் கிழக்கில் பலவருடகாலமாக 1500ருபாவே வழங்கப்பட்டுவந்தது. பலரும் பலகோணங்களில் கேள்வியெழுப்பியபோதிலும் இவ்வருடம்தான் அது கனிந்துள்ளது.
இந்த அறிவிப்பினால் சுமார் 450பேர் நன்மையடையவுள்ளனர். இதனால் அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சேவைக்காலஆசிரியஆலோசகர்களுக்கு தனியானதொரு சேவை உருவாக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ள போதிலும் இன்னும் அது அமுலுக்குவரவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
Attachments area