கல்முனை தொகுதி எம்.பி.யை பாதுகாக்க இருக்கும் ஒரே போமியுலா என்றால் அது சாய்ந்தமருதில் பிறந்து கல்முனையில் முன்னாள் பா.உ. எம்.சி.அகமது அவர்களின் மகளை திருமணம் செய்த முன்னாள் உயர்கல்வி பிரதி அமைச்சர் மயோண் முஸ்தபா அவர்களை எம்பியாக்குவதன் மூலமே சாத்தியமாகும்
கல்முனையின் பிரதிநிதித்துவம் ஒரு வரலாற்று பார்வை.
கௌரவ டட்லி சேனநாயக முன்னாள் பிரதமர் அவர்கள் கேற் முதலியார் எம்.எஸ். காரியப்பருடன் கல்முனை நோக்கி காரில், கல்முனை பட்டினசபை வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு வரும்போது தான் கல்முனை தொகுதியை பார்க்க வேண்டும் என டட்லி அவரின் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
வரும் வளியில் நீலாவணை காட் வீதி வந்ததும் காரியப்பர் இதுதான் கல்முனை தொகுதியின் வடக்கு எல்லை என்றாராம். அப்படியே காரை தீவு பாவட்டம் சந்தியில் இருந்து யூ டேன் போட்டு காரை திருப்பி அச்சந்தியில் இருந்த அபு அப்துல்லா தைக்கா, முஸ்லிம்களது 72 கடைகளையும் காண்பித்து இதுதான் கல்முனை தொகுதியின் தெற்கு எல்லை என்றாராம் காரியப்பர்.
அதற்கு டட்லி பெஸ்ட் கியர் போட்டு செகன் கியர் மாத்துவாதற்குள் காரியப்பர் தொகுதியை காட்டிவிட்டார் காரியப்பரை என்று புகழ்ந்தாராம். டட்லியின் அந்த கூட்டத்தை நான் நேரில் கண்டவன். இச்சம்பவத்தையும் காரியப்பர் என்னிடமும் கூறியுள்ளார்.
கைக்கடக்கமான ஒரு அழகிய தொகுதியை காரியப்பர் உருவாக்கி, அதில் கல்முனையை பட்டினமாகவும், கரைவாகு தெற்கு, வடக்கு, மத்தி என மூன்று கிராமசங்கங்களையும் உள்ளூராட்சி ரீதியாக உருவாக்கி நாட்டிற்கும் கல்முனைத் தொகுதிக்கும் நற்பெயர்தேடித்தந்தார்.
சாய்ந்தமருதை பிறப்பிடமாகவும், கல்முனையில் திருமணம் செய்து அதை வாழ்விடமாகவும் அமைத்து ஊர்வாதமற்ற நிர்வாகியாக வாழ்ந்தார். அல்லாஹ் அன்னாருக்கு நல்லருள் பாலிப்பானாக.
அதை தொடர்ந்து சாய்ந்தமருதில் பிறந்து கல்முனையில் திருமணம் செய்த எம்.சி.அகமது அவர்கள் கல்முனை தொகுதியின் எம்.பி.யாக 1977 வரை ஊர்வாதமற்ற அரசியலை செய்தார். கல்முனை பட்டின சபையின் தவிசாளராகவும், சாய்ந்தமருது ஜும்மா பள்ளியின் தலைவாராகவும் சமகாலத்தில் இருந்து இரு ஊர்களின் உறவுக்கு பாலமாக இருந்தார்.
அதை தொடர்ந்து எம். எஸ்.காரியப்பரின் மகளை திருமணம் செய்த ஏ.ஆர்.மன்சூர் அவர்கள் கல்முனை 1994 வரை கல்முனை தொகுதியின் எம்.பி.யாக இருந்தார். இந்த மூவரது காலத்திலும் ஊர்வாதம் பிரதேசவாதம் கிஞ்சித்தும் இருந்ததில்லை.
1985 முதல் தமிழ் பயங்கரவாதம் தலைவிரித்தாடியது. காலத்தின் தேவையாக ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப்பிடிக்குமாறு கோசமெழுப்பி முஸ்லிம் காங்கிரஸ் உருவானது. அதன் முதலாவது வடகிழக்கு மாகாண சபை தேர்தலில் கல்முனைத் தொகுதில் ஒற்றுமை எனும் கயிறு அறுக்கபட்டு பக்கத்தில் விதைக்கப்ட்ட பிரதேச வாதம் கல்முனையை அரசியல் அனாதையாக்கியது.
மூ.கா. பிரதிநிதித்துவம் செய்த சுமார் 30 வருடங்களாக கண்ட அபிவிருத்தி ஒன்றுமில்லை.
மேயர் இழுபறியை உருவாக்கி சாய்ந்தமருதையும் கல்முனையையும் பிரித்து அரசியல் செய்தார்கள்.
"வஹ்தசிமு பி கபுலில்லாஹி ஜமீஅன் வ லாதபர்ரகூ" என குத்து பாவை ஆரம்பித்து தொழுது துஆ இரஞ்சும்போது யா அல்லாஹ் கல்முனையில் இருந்து எங்கள் ஊரை பிரித்துதா என கேட்கும் நிலை முஸ்லிம் காங்கிரசின் வருகையால் உருவானது.
அக்காலத்தில் கப்பலில் ஹஜ்ஜிக்கு செல்லும்போது ஹாஜிகள் கையில் வைத்திருக்கும் குடைக்குள் இருந்த கரப்பத்தான் பூச்சி ஹஜ்ஜிக்கு போய் வந்தாற்போல 17 வருடமாக பாராளுமன்றம் போய்வந்துவிட்டு, சாய்ந்தமருதுமக்கள் எம்.பி. எடுக் முயற்சிக்காக கல்முனையின் எம்பியை பாதுகாக்க ஒரு போமிலா சொல்லுமாறு சென்றவருடம் ஹரீஸ் என்னிடம் போணில் பேசும்போது கூறினார்.
அப்போது நான் அவரிடம் கல்முனையில் எம்.பி., அமைச்சர் எல்லாம் இருக்கு இல்லாதது ஆழுமை உள்ள தலலைமை அது உங்களிடம் இருந்தால் நீங்கதான் தலைவர், அந்த ஆழுமை உங்களிடம் இல்லாததுதான் உங்கள் பிரச்சினை என்றேன்.
கல்முனை தொகுதி அபிவிருத்தி குண்றி, பிரதேசவாத தீயில் வெந்து கொண்டிருக்க ஆழுமை உள்ள பிரதிநிதித்துவம் இல்லாததே காரணம் அதைதவிர வேறொண்டுமில்லை. அல்லாஹ் வரும் தேர்தலில் கல்முனை தொகுதிக்கு ஆழும் அதிகாரத்தில் ஆழுமை உள்ள பிரதிநிதியை தருவானாக.
கல்முனை தொகுதிமக்கள் தற்போது கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய விடயம் என்ன வென்றால்,
1. சாய்ந்தமருது மட்டும் வாக்களித்து ஒரு எம்பியை பெற முடியாது.
2. கல்முனை மட்டும் வாக்களித்து ஒரு எம்.பி.யை பெறமுடியாது.
3. கல்முனை தொகுதி ஒன்று சேர்ந்து பெரும்பான்மையாக வாக்களித்தால் மட்டுமே ஒரு எம்.பி.பெறமுடியும்.
சாய்ந்தமருதுக்கு எம்.பி.எனும் கோசம் எம்.எஸ்.காரியப்பர் காலத்தில் எழுப்பப்பட்டது அது ஒரு வரலாற்று வடு.
அதாவது கல்லோயாபோட் குடியேற்ற திட்டத்தை டீ.எஸ்.சேனநாயகாவும், காரியப்பரும் சேர்ந்து இங்கினியாகலையில் ஒரு மரத்தை கோடரியால் வெட்டி ஆரம்பித்தார்கள். குடியேற்றதிட்டம் முடிவுற்று காணிகள் கையளிக்கும் காலம் நெருங்கும்போது பொது தேர்தல் வந்தது. சாய்ந்தமருதில் பிறந்து கல்முனையில் திருமணம்செய்த எம்.எஸ்.காரியப்பர் தேர்தலில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து சம்மாந்துறையில் பிறந்து சாய்ந்தமருதில் திருமணம் செய்த மேர்சா எனும் ஒரு மதுப்பிரியர் போட்டியிடுகிறார்.
தேர்தல் மேடைகளில் பேசிய காரியப்பர் அவர்கள்
"மக்காள்!
நான் சோறு ஆக்கிவைத்துள்ளேன். அகப்பை என்னுடைய கையில் இருந்தால்தான் என்னால் உங்களுக்கு சோறு பங்குவைக்க இயலும். எனது கையில் இருக்கும் அகப்பையை பறித்துவிடாதீர்கள் என்று கெஞ்சினார்.
காரியப்பன்ரி சமுகப்பற்று, ஆற்றல், தியாகம் என்பன சாய்ந்தமருது மக்களின் ஊருக்கு ஒரு எம்.பி.எனும் கோசத்திற்குமுன் எடுபடவில்லை. காரியப்பர் அத்தேர்தலில் சாய்ந்தமருதுமக்களால் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்.
தெரிவு செய்யப்பட்ட மேர்சா அவர்களை அன்றைய அரசு ஜப்பான் நாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு அனுப்பிவிட்டு அவர் நாடு திரும்புவதற்குள் கல்லோயா குடியேற்றத்தை அன்றைய விவசாய காணி அமைச்சர் சீ.பி.டி.சில்வா அவர்கள் தென்மாகாண சிங்களவர்களுக்கு காணிகளை பகிர்ந்தளித்துவிட்டார். அன்று சாய்ந்தமருது மக்கள் அந்த வரலாற்று தவறை செய்யவில்லை என்றால் அம்பாரை முஸ்லிம்களது நகராக இருந்திருக்கும். காரியப்பர் அவர்கள் தனது இறுதிக்காலம் வரை இந்த வாரலாற்று துரோகத்தை சொல்லி மனம் வருந்துவார்கள்.
தற்போதைய ஊருக்கு எம்.பி.என்ற கோசமும் எதிர்காலத்தில் கல்முனைத் தொகுதியின் எம்.பி. யை இல்லாமல் செய்யும் மற்றுமொரு வரலாற்று தவறாகும்.
அம்பாரை மாவட்ட எம்.பி. என்பது ஒரு சமுத்திரத்தில் மீன்பிடிப்பதை போன்றதாகும்.
எறும்புக்கு சிறுநீர் ஏகப்பெரு வெள்ளம் என்றாற்பேல ஒரு பெரும் மடுஎவுக்குள் இலைக்கும் மீனை பார்த்து ஏமாறும் செயலல்ல. பாவம் எனது நண்பர் சலீம் அவர் ஒரு ஆற்றலுள்ள நிர்வாகி சிலரால் ஊர்வாத ஊத்தைக்குள் உறுட்டி எடுக்கப்பட்டு விட்டார்.
அன்று ஹரீஸ் கேட்டதைபோல கல்முனை தொகுதி எம்.பி.யை பாதுகாக்க இருக்கும் ஒரே போமியுலா என்றால் அது சாய்ந்தமருதில் பிறந்து கல்முனையில் முன்னாள் பா.உ. எம்.சி.அகமது அவர்களின் மகளை திருமணம் செய்த முன்னாள் உயர்கல்வி பிரதி அமைச்சர் மயோண் முஸ்தபா அவர்களை எம்பியாக்குவதன் மூலமே சாத்தியமாகும். இது ஒரு காலத்தின் தேவை. மயோண் ஆளும் கட்சியில் எம்.பி.யானால் குறைந்தது ஒரு பிரதி அமைச்சராக இருப்பார். ஆற்றல். திறண். மொழி அறிவு உள்ள ஒருவரே நமது கல்முனைத் தொகுதிக்கு தேவை.
ஊர்வாதங்களை மறந்து எதிர்கால நலனுக்காக கல்முனை தொகுதியின் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க சிந்தித்து ஒன்றுபடுவோமா?
சலீம் ஒரு ஒழுக்கமுள்ள நல்ல மனிதர் அவரை அன்று பஸீர் சேர் அவமானப்படாற்போல் ஆக்கிவிடாதீர்கள். இது புத்தி உள்ளவர்களுக்கு புரியும்.
எனது இந்த பதிவு மடையர்களுக்கு புரிவது கடினம்.
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்ல புத்தியை தருவானாக.
ஒன்று பட்டால் உண்டு வாழவு. ஒற்றுமை இன்றேல் அனைவருக்கும் தாழ்வு.