முஸ்லிம்களின் ஜனாஸா (மரண) விவகாரம் மற்றும் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் தொடர்பில், முன்னாள் அமைச்சரும், ஸ்ரீல.சு.க. பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தலைமையிலான குழுவினர், இன்று (08) புதன்கிழமையன்று, நீதி அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வாவை, அவரது அமைச்சு அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
ஒரு முஸ்லிம் மரணித்தால், மிக அவசரமாக (24 மணித்தியாலத்திற்குள்) அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பது, இஸ்லாத்தின் சட்ட திட்டங்களில் ஒன்றாகும்.
இந்நிலையில், முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் அவசரமாக வைத்தியசாலைகளிலிருந்து எவ்விதத் தாமதங்களுமின்றி கையளிக்கப்படல் வேண்டும். முஸ்லிம் மையங்களை, வைத்திய சாலைகளில் மிக நீண்ட நேரம் வைக்காமல், அவை உறவினர்களிடம் அலைக்கழிக்கப்படாமல் ஒப்படைக்கப்படல் வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் என, இதன்போது பைஸர் முஸ்தபா எம்.பி. உள்ளிட்ட குழுவினர், அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர்.
இதனைக் கருத்தில் கொண்ட அமைச்சர், இது தொடர்பில் தான் கவனமெடுத்து செயற்படுவதாகவும், வைத்தியசாலை அதிகாரிகள், பிரேதப் பரிசோதகர்கள் உள்ளிட்ட அதனை நிர்வகிப்போர் அனைவருக்கும் இது குறித்து அறிவுறுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான திருத்தச் சட்டத்தை நீக்குவது தொடர்பில், அத்துரலிய ரத்தன தேரர் எம்.பி. யினால் இரு திருத்தங்கள் இன்று (08) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.
1951 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தை நீக்குதல் மற்றும் திருமணக் கட்டளைச் சட்டத்தைத் திருத்துதல் ஆகிய இரு திருத்தங்களை அவர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

இது தொடர்பிலும் அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வாவிடம் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. இதற்கு பதில் அளித்த அமைச்சர், இது தொடர்பிலும் தான் ஆராய்ந்து முஸ்லிம்களுக்கு எவ்விதப் பாதகமுமில்லாத தீர்மானம் ஒன்றை எடுப்பதாகவும், பைஸர் முஸ்தபாவிடமும் முஸ்லிம் சம்மேளன உறுப்பினர்களிடமும் உறுதிப்பாடளித்தார்.
இக்கலந்துரையாடலில், பைஸர் முஸ்தபா எம்.பி., கண்டி மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமைப்பாளர் பாரிஸ் ஹாஜியார், முஸ்லிம் சம்மேளனத் தலைவர் என்.எம். அமீன் உள்ளிட்ட உறுப்பினர்கள், முஸ்லிம் புத்திஜீவிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.