இது வரை காலம் இருந்து வந்த சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவம் 5 ஆக இருந்ததனை தற்போது விஜதாச ராஜபக்ஸ அவர்கள் அதனை 12.5 உயர்த்த வேண்டும். என யாப்பு திருத்தம் ஒன்றினை கொண்டு வர முயற்சி செய்து வருகிறார்.
அதற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்கள் ஒரு போதும் இடமளிக்க கூடாது என அருணலு மக்கள் முன்னணியின் தலைவர் வைத்தியர் கே,ஆர் .கிசான் தெரிவித்தார்.
இன்று (07) டிக்கோயா கட்சி அலுவலகத்தில் கட்சித் தலைவர்களை சந்தித்து ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இந்த நாட்டில் தமிழ்,சிங்களம்,முஸ்லிம்,அனைத்தின மக்களும் மிக ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள.; கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் முஸ்லிம் மக்கள் கோட்டபாய ராஜபக்ஸ அவர்களின் வெற்றிக்காக வாக்களித்திருக்கிறார்கள்.அதே நேரம் அவர் ஜனாதிபதி ஆன பின் அவருடைய செயப்பாடுகளை அவதானித்து சிறுபானமை மக்கள் அவரை நெருங்கி வருகின்ற நிலையில் இவ்வாறான சிறுபான்மை மக்களுக்கு பாதகமான ஒரு செயல் நிறைவேறினால் மீண்டும் மக்கள் அவரை வெறுக்க நேரிடுவதோடு,கடந்த காலங்களில் ஏற்பட்ட அதிகார போட்டிகள் காரணமாக இந்த நாட்டில் சுமார் 30 வருட யுத்தம் நடைபெற்றது.அந்த யுத்தத்திள் பிரதி பலன்கள் தொடர்பாக இன்றும் ஜெனிவா மாநாட்டில் பேசப்பட்ட வருகின்றனர்.
இந்நிலை மீண்டும் இவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டால் பாதகமான சூழ்நிலையினையே ஏற்படுத்தும்.
அதே நேரம் நாட்டை சுதந்திரமடைய செய்வதற்கு தமிழ் சிங்கள முஸ்லிம் அனைவரும் இனைந்து தான் செயப்பட்டுள்ளார்கள் ஆகவே விஜதாச ராஜபக்ஸ என்பவர் இன்று ஐக்கிய நாளை வேறு கட்சியில் இருப்பார். அவ்வாறாவர்களை மக்கள் புறக்கணித்து வருகின்ற நிலையில் இவருடை சிபாரிசுகளை கொண்டு வருதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. சரியான தீர்வு கிடைக்க வேண்டும். என்றால் மக்களின் அபிலாசைகளை அறிந்து சிறுபான்மை கட்சிகளின் விருப்பத்துடன் நிறைவேற்றுவதன் மூலம் உண்மையான ஜனநாயகம் உருவாகும். அவ்வாறு இல்லாது தன்னிச்சையாக முடிவு எடுத்தால் பிற்காலத்தில் அது பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் இந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் பல சிறுபான்மை கட்சிகள் ஜனாதிபதி கோட்டபாயராஜபக்ஸ அவர்களுடன் இணைந்திருந்ததனால் இதனை ஒரு போதும் கொண்டு வரக்கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.