நாவிதன்வெளி சமூர்த்தி வங்கியின் நிலைமையினை ஆராய்ந்த கருணா அம்மான்

பாறுக் ஷிஹான்-
நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் கீழுள்ள சமூர்த்தி வங்கியின் நிலைமையினை தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் சென்று பார்வையிட்டார்.

அம்பாறை மாவட்டத்திற்கு செவ்வாய்க்கிழமை (31) முற்பகல் விஜயம் செய்த நிலையில் சமூர்த்தி வங்கி அலுவலகத்திற்கு சென்றிருந்தார்

அண்மைக்காலமாக பெய்த அடைமழையின் காரணமாக குறித்த வங்கி பாதிக்கப்பட்ட விடயம் தொடர்பாக அறிவதற்கு அங்கு சென்றதுடன் வங்கியில் பணியாற்றும் ஊழியர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடினார்.

இதன் போது முன்னாள் பிரதி அமைச்சரின் கவனத்திற்கு இவ்வங்கியின் முக்கியத்துவம் குறித்தும் அதிகளவான மக்கள் வந்து போகும் இவ்வங்கியில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக வங்கியின் உட்பகுதியில் நீர் தேங்கி காணப்படுகின்றமை காரணமாக அசௌகரியங்களை எதிர்கொள்வதாக தெரிவித்தனர்.

மேலும் வங்கியின் பாதிப்புகளை சென்று பார்வையிட்ட முன்னாள் பிரதி அமைச்சர் ஏழை மக்களின் சேமிப்பு புத்தக அலுமாரிகள் களஞ்சிய பகுதிகளில் மழை நீர் உட்புகும் நிலைமையும் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.இவ்வங்கி எவ்வித அடிப்படை வசதியற்ற நிலையில் அதன் கூரை சேதடைந்து காணப்படுகிறது.

நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் பௌதீக வளகுறைபாடுகளுடன் சேதடைந்தும் சுற்றுமதில் அற்ற நிலையில் பாதுகாப்பற்ற நிலையில் இவ்வங்கி இயங்கிவருகின்றதை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று புனரமைத்து தருவதாக குறிப்பிட்டார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -