இது தொடர்பில் தெரியவருவதாவது,
தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட யுவதியின் தந்தை தினந்தோரும் மது அருந்திவிட்டு வந்து தனது மகளிடம் சண்டைப்பிடிப்பதாகவும் நேற்று இரவும் மதுபானம் அருந்திட்டு வந்து தனது மகளிடம் கடுமையான முறையில் சண்டைபிடித்துள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், “எனது தந்தை மது மருந்தி விட்டு வந்து மோசமான முனறயில் சண்டை பிடித்ததன் காரணமாகவே தான் தற்கொலை செய்து கொள்வதாக” தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தன் கைப்பட கடிதம் எழுதி வைத்துள்ளார்.
இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட யுவதி 24வயதுடைய ராஜதுறை நவலெட்சுமி என்ற யுவதி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மரண விசாரணைகள் திடீர் மரண விசாரணையாளர் தலைமையில் இடம்பெற்றவுடன் யுவதியின் சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பபட்டுள்ளது.
சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கபடுமென பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.