சிம்பு திருமணம் முடிக்க இருக்கும் பெண் வெளியானது புகைப்படம்..!

ஒலுவில் எம்.ஜே.எம். பாரிஸ்-

மிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர், சிம்பு. அவருக்கு திருமணம் செய்து வைக்க அவருடைய அப்பா டி.ராஜேந்தரும், அம்மா உஷா ராஜேந்தரும் மணப்பெண்ணை தேடி வருகிறார்கள்.

இந்தநிலையில் அவருடைய தம்பி குறளரசனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. இதனைத்தொடர்ந்து சிம்புவின் திருமணம் தொடர்பான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடந்த வருடம் May மாதம் உறவுப்பெண் ஒருவருடன் சிம்புவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியானது. அது காட்டுத்தீ போல் வேகமாக பரவியது.

இதற்கு மறுப்பு தெரிவித்த சிம்பு, திரையுலகில் பிரபலமாகவுள்ள கலைஞர்கள் தினமும் பலரை சந்திப்பது தவிர்க்க முடியாதது. அதை வைத்து அவர்களின் சொந்த வாழ்க்கையை இணைத்து பேசக்கூடாது. கற்பனையான தகவலை செய்தியாக வெளியிடக்கூடாது. 

என் திருமணத்தை பற்றி வெளியான தகவல்களில் உண்மையில்லை. அந்த வதந்தியை யாரும் நம்பவேண்டாம். என் திருமணத்தை முன்கூட்டியே நானே அறிவிப்பேன். ரசிகர்களும், பொதுமக்களும் கற்பனையாக வெளியாகும் செய்திகளை நம்பவேண்டாம். எந்த பெண்ணுடனும் இதுவரை எனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்கவில்லை என கூறியிருந்தார்.

இந்நிலையில், நடிகர் சிம்பு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பெண்ணுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படமொன்றை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்தப் படம் இப்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

யார் இந்தப் பெண்? சிம்பு திருமணம் முடிக்க இருக்கும் பெண்ணா? போன்ற கேள்விகளை அவரது ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். ஏற்கெனவே சிம்புவின் திருமணம் குறித்த பேச்சுகள் அடிபட்டும் வரும் நிலையில்,

இப்படம் பகிரப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்த இன்ஸ்டாகிராம் பக்கம் அவரது தானா? என்பது குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளது. அவர் சமூக வலைத்தளத்திலேயே இல்லை என்றும் கூறப்படுகிறது.

சில தினங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் மாநாடு படத்திற்காக சிம்பு உடற்பயிற்சி செய்யும் வீடியோவொன்று வைரலானது. அதற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இது சிம்புவிற்கு 50வது திரைப்படம்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -