கற்கை நெறியைத் தொடர வட்டி இல்லாக் கடன்...

ஐ. ஏ. காதிர் கான்-

ரசு அல்லாத உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்புக் கற்கை நெறியை மேற்கொள்வதற்காக வட்டி அற்ற கடனை வழங்கும் வேலைத்திட்டம், இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படும் என்று உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருப்பதாக, மாணவர் கடன் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உயர் கல்வி அமைச்சுக்கு உட்பட்டதாக அங்கீகரிக்கப்பட்ட 12 உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்புக் கற்கை நெறியைத் தொடர்வதற்காக, மாணவர் ஒருவர் 8 இலட்சம் ரூபா வட்டி இல்லாக் கடனை இதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
2018 ஆம் ஆண்டில் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் சித்தி எய்திய அரச பல்கலைக்கழகங்களுக்கான வாய்ப்புக் கிடைக்காத மாணவர்கள் முதல் கட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியும்.

இந்தக் கடன் திட்டத்தின் கீழ் பிரவேசிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்காத 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு இந்தக் கடனைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்தக் கடனைப் பெற்றுக் கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரமாக அதிகரிக்கப்படும் என்றும் உயர் கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -