இந்திய ஊடகங்களுக்கு வருகின்றது ஆப்பு! ஐடியா அஜித் டவல் அமித் சா களத்தில்!.

எம்.எம்.நிலாம்டீன்-

நேற்று உள்துறை அமைச்சர் அமிட்சா, பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இருவரும் அவசரமாக மோடியை சந்தித்துள்ளனர்!

இம்மாத இறுதியில் அவசரமாக பாராளு மன்றம் கூடுகிறது.

மோடி அரசு பதவி ஏற்றது முதல் தேர்தல் அறிக்கையில் கூறியது படி ஒவ்வொன்றாக நிறை வேற்றி வருகிறது

காஸ்மீர் பிரச்னை, முத்தலாக், அயோத்தி, குடியுரிமை என்று பல பிரச்னைகளை நிறைவேற்றி வருகிறது

எதிர் கட்சிகள் போராட்டம் நடத்தினாலும் மத்திய அரசு ஒரு போதும் பின் வாங்கப் போவதில்லை என்று கூறி விட்டது.

ஜனவரி 26 ந் தேதி குடியரசு தினவிழா அதில் குடியரசு தலைவர் கொடியேற்றி மத்திய அரசின் சில நடவடிக்கைகள் குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.

இந்நிலையில் ஒரு பெரிய பிரச்னையை கையில் எடுக்க உள்ளது மோடி அரசாங்கம் ,,

இந்திய ஊடகங்களை பற்றியது.

அதாவது இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மை ஊடகங்கள் திட்டமிட்டு இந்தியாவிற்கு எதிராகவும், அரசாங்கத்திற்கு எதிராகவும் பொய் தகவல்களை பரப்பி வருகின்றன,,

சில நேரங்களில் மிக பெரிய பொய்யை சொல்லி விட்டு, அதன் பின் கோர்ட் கேஸ் வந்து விடுமோ என்று சிறிதாக வருந்துகிறோம் என்று போட்டதாக ரெகார்ட் பண்ணி வைத்து விடுகிறார்கள்,, சில செய்திகளுக்கு மத்திய அரசு கேள்வி கேக்கும் போது நாங்கள் வருந்துகிறோம் என்று போட்டு விட்டோம் என்று மழுப்பி விடுகிறார்கள் இதற்கெல்லாம் ஆப்பு வரப் போகிறது

உலகிலே அதிக ஊடக சுதந்திரம் அமெரிக்கா இங்கிலாந்து இந்தியா இந்த மூன்று நாடுகளில் தான் ,, அமெரிக்கா பத்திரிகைகள் பொதுவாக நாட்டை பற்றி அவ மரியாதையாக பேச மாட்டார்கள்,, பேசவும் முடியாது எனவே ஊடக சுதந்திரம் அந்த நாட்டிற்கு பிரச்சனை இல்லை

ஆனால் இந்திய ஊடகங்கள் நாட்டிக்கு எதிராக எதிர்வினையை அதிகமாக தூண்டுகின்றன ,, அதுவே நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரிய தடையாக உள்ளது

சில நேரங்களில் இவர்களில் செய்திகளால் வெளிநாடுகளில், அங்குள்ளவர்கள் இதை சாட்சியாக்கி விடுகின்றனர்,,,

எனவே இந்திய ஊடகங்களின் அதிகாரங்கள் குறித்து சட்ட திருத்தங்கள் கொண்டு வர மோடி முடிவு செய்துள்ளார் ,, அதற்கு முன்னோட்டமாக அந்த துறை அதிகாரிகள், பொருளாதார ஆலோசகரர்கள் இவர்களிடம் ஆலோசனை நடத்தி உள்ளார் ,, கடைசியாக அஜித் தோவல், அமித்சா இருவரிடமும் ஆலோசனை நடத்தி உள்ளார்

இறுதி கட்ட ஆலோசனையில்

வரும் பாராளுமன்ற கூட்ட தொடரில் ஊடகங்கள் இந்திய இறையாண்மைக்கு எதிரியாக பேசினால் முதலில் மாத கணக்கில் தடை செய்யப்படும் ,, அதையும் மீறி நாட்டுக்கு எதிராக செயல்பட்டால் முழுவதும்மாக தடை செய்யும் அதிகாரத்தை மத்திய அரசு கொண்டு வர இருப்பதாக தெரிகிறது.

பழைய வீடியோக்களை போட்டு இப்போது போராட்டம் நடப்பதாக செய்தி போட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நெறியாளர்கள் மக்கள் சொன்னார்கள் ஊருக்குள் அப்படி பேசுகிறார்கள் என்று எல்லாம் சொல்லமுடியாது.

ஊடக நெறியாளர்கள் சொல்வதையும் அந்த ஊடகம் சொன்னதாகவே எடுத்துக் கொள்ளபடும்,,,

ஒரு செய்தியை சொன்னால் அரசு கேட்டால் அதற்குரிய ஆதாரத்தை தர வேண்டும்,,

மேலும் பிரிவினைவாதிகளை வைத்து பேட்டி எடுக்கும் ஊடகங்களை கவனிக்க தனி குழு அமைக்க படும் ,,

இனி விவாதத்தில் பொறுக்கி தேசம் என்று கூறினால் அதன் விளைவுக்கு ஊடகமே பொறுப்பு.

வெளி நாட்டில் இருக்கும் ஊடகங்கள் இந்திய செய்தியை உண்மையாக போடவில்லை என்றால் அந்த ஊடகம் தடை செய்யப்படும் ,,,

அதாவது ஒட்டுமொத்த ஊடக சுதந்திரம் இரும்புக்கரம் கொண்டு அடக்க மோடி முடிவு.தமிழ் நாட்டில் நக்கீரன் ஜூனியர் விகடன் போன்ற தமிழர் நலன் விரும்பி இதழ்களுக்கு பெருத்த அடிதான் .

இந்தியாவில் அடுத்த மாதம் முதல் இரண்டு தேசிய போராட்டம் வெடிக்கும் ஆபத்து உள்ளது ..மீண்டும் தேசிய சுதந்திரப் போராட்டம் மற்றும் ஊடக சுதந்திரப் போராட்டம் ஆகிய இரண்டு போராட்டங்களையும் மக்களும் ஊடக காரர்களும் செய்ய வேண்டும் .

இந்த ஊடக சுதந்திரப் பறிப்பு என்பது நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள அமுலுக்கு வந்துள்ள CAA குடியுரிமை சட்டத்தை பிஜேபி மற்றும் ஆர் எஸ் எஸ் காரர்கள் கையில் எடுக்கவுள்ளார்கள் .அப்போது நடக்கும் அகோர சம்பவங்களை ஊடகம் வெளியாக்க கூடாது அந்த செய்திகள் ஏனைய நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களுக்கு போய்ச் சேரக்கூடாது என்பது முதல் காரணம் .வட இந்தியாவில் மிகப்பெரிய திட்டத்துடன் குடியுரிமை சட்டத்தை அமுல் படுத்த உபி முதல்வர் திட்டமிட்டுள்ளார் ..உபியில் இருந்து முஸ்லிம்களை துடைத்து நசுக்கும் திட்டம் ..இந்தியாவில் ஒரு மியன்மார்..

அடுத்த அதிரடி

இந்தியாவுக்குள் இருந்து, இந்தியாவில் உண்டு கொழுத்து திரியும் சமூக ஆர்வலர் போர்வையில் அலையும் நாதாரிகளுக்கு ஆப்பு விரைவில்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -