மருத்துவ பீட மாணவனை காணவில்லை பெற்றார் அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு,


ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
கிழக்கு பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருடத்தில் கற்றுக் கொண்டிருந்த மலையகப்பகுதியினை சேர்ந்த மருத்துவ பீட மாணவனை காணவில்லை. என அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் கடந்த 10.01.2020 இரவு 10.55 முறைபாடு செய்யப்பட்டுள்ளதாக மாணவனின் தந்தை கே.சின்னத்தம்பி தெரிவித்தார்.
இவ்வாறு காணாமல் போன மருத்துவ துறை மாணவன்,சின்னதம்பி மோகன்ராஜ் வயது 21 என அக்கரபத்தனை ஹோல்புறுக் பகுதியை சேரந்தவர் என்று பொலிஸ் முறைபாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவுது. குறித்த மாணவன் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு கடந்த வருடம் 2019.01.23 திகதி தனது பெற்றோர்களால் கொண்டு வந்து மருத்துவ கற்கை நெறிக்காக அனுமதிக்கப்;பட்டுள்ளார். இரண்டாம் வருடம் கல்வி பயின்றுக்கொண்டிருந்த குறித்த மாணவன் கடந்த 10 திகதி கோயிலுக்கு செல்வதாக சக நண்பர்களிடம் தெரிவித்து விட்டு மாணவர் விடுதியிலிருந்து வெளியேறியுள்ளார். அதனை தொடர்ந்து இரவு பத்து மணி வரை அம்மாணவன் வராததன் காரணமாக இவருடைய நண்பர் ஒருவர் அம்மாணவனின் தாய்க்கு அழைத்து மோகன்ராஜ் என்ற மாணவனுக்கு வேறு தொலைபேசி இலக்கம் ஏதும் உள்ளதா?என வினாவி உள்ளனர்.
அதனை தொடர்ந்து சந்தேகம் கொண்ட வீட்டார் குறித்த மாணவனின் தொலைபேசிக்கு பல தடைவைகள் அழைப்பு விடுத்த போதிலும் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.
பின்னர் இது தொடர்பாக அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்து விட்டு உறவினருடன் குறித்த மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 10 திகதி காணாமல் போன மாணவனை தேடி சென்ற தாயார் தற்போது சுகயீகமுற்ற நிலையில் மட்டகளப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரின் தந்தை மேலும் தெரிவித்தார்.
இதே வேளை குறித்த மாணவன் தொடர்ந்து கோயிலுக்கு சென்று வருவதாகவும,; குறித்த மாணவனின் தொலைபேசியிலிருந்து இறுதியாக மன்னார் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவருக்கு அழைப்பு சென்றுள்ளதாகவும், பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளன.
எனவே மாணவனுக்கு என்ன? நடந்தது தொடர்பாக பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இது குறித்த தகவல் தெரிவந்தவர்கள் குறித்த தொலைபேசிகளுக்கு அறிவிக்குமாறு அவரது தந்தை மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தொலை பேசி இலக்கம் 0515618983,-0775013587
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டகளப்பு மட்டும் அக்கரபத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -