க.பொ.த உயர் தர பெறுபேறுகளை பெற்ற மற்றும் க.பொ.த சாதாரண பரீட்சை முடித்த இளைஞர் யுவதிகளுக்காக சிம்ஸ் கேம்பஸ் வருடா வருடம் நடாத்தும் "இலவச தலைமைத்துவ மற்றும் உயர்கல்வி வழிகாட்டல் செயலமர்வு ஞாயிற்றுக்கிழமை (12) காலை சிம்ஸ் கேம்பஸ் (CIMS CAMPUS) முஸ்தபா கேட்போர் அரங்கத்தில் இடம்பெற்றது.
இக்கருத்தரங்கில் பிரதான வளவாளராக சிம்ஸ் கேம்பஸ் தவிசாளரும் சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இலங்கைக்கான தூதுவருமான கலாநிதி அன்வர் எம் முஸ்தபா கலந்து கொண்டு மாணவர்கள் எதிர்காலத்தில் எவ்வாறான துறைகளை தெரிவு செய்வதன் மூலம் இலகுவாக முறையில் தொழில் வகைகளை தெரிவு செய்ய முடியும் என்பது பற்றி விரிவுரையாற்றினார்.
இந் நிகழ்வில் அல்-மீஸான் பௌண்டஷன்,ஸ்ரீலங்காவின் பிரதி தலைவர் எம்.என்.எம். சிப்ஹா, பிரதி தவிசாளர் எம்.எஸ்.எம். அப்ரிடீன், ஊடக பிரிவின் உப தலைவர் திரு.இன்ஸாப், கிழக்கு இளைஞர் அமைப்பின் தலைவர் ஆர்.எம். தானீஸ் , சிம்ஸ் கேம்பஸ் சந்தைப்படுத்தல் அதிகாரிகள் உட்பட 300க்கும் அதிகமான இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.