கம்பனிகளின் சூழ்ச்சிக்கு அடிபணியாது தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் பெற்றுக்கொடுக்க வேண்டும்.


அருணலு மக்கள் முன்னணியின் தலைவர் டாக்கடர் கே.ஆர் கிசான் தெரிவிப்பு.
ஹட்டன் கே.சுந்தரலிங்கம் விசேட நிருபர்-
னாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்கள் கடந்த காலங்களில் எடுத்த மக்கள் சார்ந்த நலன் திட்டங்கள் ஊடாக நாங்கள் அவருக்கு பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்திருந்தோம்.
இந்நிலையில் தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள தர ஜனாதிபதி முடியு செய்துள்ளார். இது மிகவும் வரவேட்க வேண்டிய விடயமே எனினும் இந்த சம்பளத்தினை வழங்குவதற்கு தற்போது கம்பனிகள் இதனை தடுத்து நிறுத்துவதற்கு பல சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் சட்டங்களை மாற்றியாவுது தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என அருணலு மக்கள் முன்னணயின் தலைவரும் வைத்தியருமான டாக்டர் கே.ஆர்.கிசான் தெரிவித்தார்.
நேற்று இரவு (19) டிக்கோயா பகுதியில் நடைபெற்ற ஊடகப சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்..
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் 51 வீதமான தோட்டங்கள் அரசாங்கத்திற்கும் 49 வீதமான தோட்டங்கள் கம்பனிகளுக்கும் தான் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளன.
ஆயிரம் ரூபா சம்பளம் என்பதனை எப்படியும் கொடுக்கலாம். காரணம் இன்று தொழிலாயர்கள் ஒரு பறிக்கும் கொழுந்தினை கொண்டு ஐந்து கிலோ தேயிலை தூள் தயாரிக்கப்படுகின்றன.
உள்ளுர் சந்தையினை எடுத்துக்கொண்டாலும் இன்றுள்ள விலை படி சுமார் ஐந்து கிலோ தேயிலைக்கு 7500 ரூபா கிடைக்கின்றது.அதனை தவிர இன்று கம்பனிகள் அல்லாத தோட்டங்களில் பகல் உணவு பெற்றுக்கொடுத்து 1000 ரூபா சம்பளம் பெற்றுக்கொடுக்கப்படுகின்றது.
வெளிநாட்டு சந்தையை எடுத்து கொண்டால் ஒரு கிலோ தேயிலை 15000 ரூபாவுக்கு செல்கிறது .இந்நிலையில் தோட்டங்கள் நட்டம்மென்று கூறுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது இன்று ஒரு கம்பனியின் சீ.ஓ. ஒருவருக்கு மாதச்சம்பளமாக 45 லட்சமாக இருக்கின்றது. இதனை 22 கம்பனிகளில் உள்ளர்கள் பெரும் போது கிட்டதட்ட 11 கோடிக்கு மேல் சம்பளமாக வழங்கப்படுகின்றன. இவர்களுக்கு வாகன வசதி பங்கள வசதி என அத்தனையும் பெற்றுக் ;கொடுக்கப்படுகின்றன. அப்படி இருக்கையில் கம்பனிகள் நட்டத்தை தான் காட்டும்.;
அத்தோடு கம்பனிகள் 50 சதவீத நிர்வாக கழித்த பின்னரே லாபம் பார்க்கப்படுகின்றன. எனவே நட்டம் என்று சொல்வதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இன்று ஜனாதிபதி கோட்டபாய அவர்கள் இவற்றை அறிந்து தான் தமிழ் புதுவருடத்தில் மலையக மக்களுக்கு ஒரு நல்ல செய்தியினை சொல்லியிருக்கிறார்.இன்று மக்கள் அவர் பக்கம் உள்ள நிலையில் இதனை ஜனாதிபதி எவ்வாறான தடைகள் வந்தாலும் அவற்றை உடைதெ;தெறிந்து நிறைவேற்ற வேண்டும்.
கடந்த காலங்களில் சம்பள விடயம் தொடர்பாக நடைபெற்ற போராட்டங்களில் எல்லோருக்கும் வெற்றி கிடைத்துள்ளது ஆனால் தோட்டத்தொழிலாயர்கள் பல வருடக்கணக்கில் போராடியும் அவர்களுக்கு நியாயமான சம்பளத்தினை பெற முடியாதுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -