இலங்கை அரசியலில் சமூக வலைத்தளங்கள் மிக முக்கிய தாக்கத்தை செலுத்துகின்றது - முன்னாள் இராஜங்க அமைச்சர், பாரளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ்



எம்.என்.எம்.அப்ராஸ்-
லங்கை அரசியலில் சமூக வலைத்தளங்கள் மிக முக்கிய தாக்கத்தை செலுத்துகின்றது என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
குரு ரீவி இணையதள அங்குரார்ப்பன நிகழ்வும், ரீ- சேர்ட் அறிமுகமும் ஆளுமைகளுக்கான மகுடம் விருது வழங்கும் நிகழ்வும் குரு ரீவி பணிப்பாளர் ஹிசாம் ஏ. பாவா தலைமையில் சாய்ந்தமருது-மாளிகைக்காடு பாவா றோயலி வரவேற்பு மண்டபத்தில் நேற்று மாலை (13) இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
சமகாலத்தில் சமுக வலைத்தளத்தின் தாக்கம் உலகில் செல்வாக்கு செலுத்தும் சக்தியாக காணப்படுகின்றது. இது இலங்கை அரசியலில் மிக முக்கிய தாக்கத்தையும் உண்டாக்கியது எனலாம்.
அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் இதன் பங்கு அதிகமாக காணப்பட்டது என்று எல்லோரும் பேசும் விடயமாக மாறியுள்ளது . பழமை வாய்ந்த மாமூல் அரசியலில் இருந்து இன்று உலகம் மாறியுள்ளது. அதற்கு இன்று சமூக ஊடகங்கள் மிக முக்கிய பங்கை வகிக்கின்றது.
எமது முஸ்லிம் சமூக அரசியலையும் ஒரு புதிய பரிணாமத்திற்கு சமூக வலைத்தளங்கள் கொண்டு செல்லும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
மேலும் இந்திய அரசியலில் தேர்தல் காலங்களில் பிரசாந் கிசோர் என்ற இளைஞனின் பங்களிப்பும் சமூக வலைதள வெற்றி வியூகம் மிக முக்கியமானது எனவும் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சப்ராஸ் மன்சூர், தென் கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீட பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர், அரசியல் புரட்சிகர முன்னணியின் தலைவர் சட்டத்தரணி எம்.சீ. ஆதம்பாவா, ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ.அப்துல் றஸ்ஸாக், வர்த்தக பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -