ராகம வைத்தியசாலை தொழுகை அறை மீண்டும் திறக்கப்படும்- பைஸர் முஸ்தபா உறுதி


ஐ. ஏ. காதிர் கான்-

ராகம மாவட்ட வைத்தியசாலையில் இயங்கி வந்த தொழுகை அறையை மீண்டும் திறப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துத் தருவதாக,
முன்னாள் அமைச்சரும் ஸ்ரீல.சு.க. பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா உறுதியளித்துள்ளார்.
கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் அவரிடம் விடுத்த கோரிக்கைகளுக்கு அமைவாகவே, விரைவில் இதற்குத் தீர்வு பெற்றுத்தருவதாக அவர் உறுதியளித்ததாக, சம்மேளனத் தலைவர் அஸ்லம் ஒஸ்மான் தெரிவித்தார். 

ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களையடுத்து அன்று முதல் இன்று வரை ராகம வைத்தியசாலையின் தொழுகை அறை மூடப்பட்டுள்ளதையும் அஸ்லம் ஒஸ்மான் சுட்டிக்காட்டினார். தற்போது நாட்டில் தீவிரவாதம் இல்லை. சுமூக நிலை தோன்றியுள்ளது. இந்நிலையில், குறித்த தொழுகை அறை விரைவில் திறக்கப்பட வேண்டும் என, பைஸர் முஸ்தபா எம்.பி. யிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். 

இதேவேளை, பல வருடங்களாக மூடப்பட்டுள்ள கிறேண்ட்பாஸ் மோலவத்த பள்ளிவாசல் தொடர்பிலும் அரசியல்வாதிகளிடம் பலவிடுத்தம் கோரிக்கை விடுத்தோம். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி மொழிகள் வழங்கப்பட்டன. எனினும், அதற்கான தீர்வுகள் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை. ஆகவே, இப்பகுதி வாழ் மக்களின் நலன் கருதியும், இப்பள்ளிவாசலும் உடனடியாகத் திறக்கப்படல் வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை முன் வைத்துள்ளோம். 

இந்த இரு கோரிக்கைகளுக்கும் மிகத் துரிதமாகத் தீர்வு பெற்றுத் தருவதாக, பைஸர் முஸ்தபா எம்.பி. எம்மிடம் உறுதியளித்திருப்பதாகவும், சம்மேளனத் தலைவர் அஸ்லம் ஒஸ்மான் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -