பிரதேச சபை நடைமுறைப்படுத்திய வீதி அமைப்பு, மின்குமிழ்களை பொருத்தும் திட்டங்களில் ஊழல்கள் இருப்பதாகத் தெரிவித்து முகப்புத்தகத்திலும் வேறு சமூக வலைத்தளங்களிலும் கட்சி நிலைப்பாடுகளுடன் சில கட்சிகளைச் சார்ந்தோர் விசமப் பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு விசமப் பிரச்சாரங்களில் ஈடுபடுவோர் அரசியல் வங்குரோத்தில் நேரத்தினை ஒதுக்கி பொய்யை மீண்டும் மீண்டும் முகப் பத்தகத்தில் எழுதினால் அவை உண்மையாகி விடும் என கனவு காண்கின்றனர்.
உள்ள10ராட்சி மன்றங்கள் அரச தாபனங்கள் ஆகும். எந்த அரசின் நிதி தொடர்பிலும் கணக்காய்வுகள் உண்டு. உள்ள10ராட்சி மன்றங்களுக்கு மாகாண மற்றும் மத்திய அரசின் கணக்காய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதற்கு மேலாக இலங்கையில் இலஞ்சம் அல்லது ஊழல்கள் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு முறைப்பாடுகளை இலகுவாகப் பதிவளிக்கத்தக்க வகையில் இயங்குகின்றது. 1954 என்னும் தொலைபேசிக்கு அழைப்பு எடுத்துக்கூட முறையிட முடியும். இவைகள் ஒன்றும் இரகசியமானவை அல்ல. தகவல் அறியும் சட்டத்தின் வாயிலாகக் கூட தகவல்களை கோரிப்பெற்று உண்மைகளை எவரும் அறிந்து கொள்ள முடியும்.
உண்மை நிலைமைகள் இவ்வாறு இருக்கையில், அரசியல் இலாபங்களுக்காக அமைச்சர்கள் முதல் பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர்கள் வரையில் சிலர் பிரதேச சபைகளின் திட்டங்களின் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்காட்டி ஊழல்கள் இடம்பெற்றுள்ளன எனக் கூறுவது அரசியல்காரணங்களுக்காக மக்களை பொய்யாக வாழிநடத்தும் முயற்சியேயாகும். அவர்களிடம் ஒரு தவிசாளராக நீங்கள் மக்களுக்கு உண்மை உரைப்பவர்களாக இருந்தால் குற்றத்தினை நிரூபிக்க சவால் விடுகின்றேன்.
அரசியலை சகலருக்கும் மேற்கொள்ள உரிமை உண்டு. அவ் அரசியல் மக்கள் வேலைத்திட்டங்களின் வாயிலாகவும் தர்மங்களுடனும் நீதியுடனும் கூடியதாக அமைய பெற வேண்டும்;. சமூக வலைத்தளங்களில் பிரதேச சபைகள் மீது மின்குழிழ்கள் கொள்வனவு தொடர்பில் விமர்சிக்கின்றனர். அரச நிறுவனம் ஒன்று ஒரு கொள்வனவைச் செய்வதில் அரச பெறுகை நடைமுறைகள் இருக்கின்றன. அப் பெறுகை நடைமுறைகளை மீறி செயற்படுவது குற்றமாகும். இவ்வளவு தூரம் விடயங்களை ஒழுங்குபடுத்துவதற்கு பொறிமுறைகள் இருந்தும் அவை பற்றி அடிப்படை அறிவினைக் கூட கொண்டிருக்காதவர்களா தம்மை அரசியல் தலைவர்களாக நம்புகின்றனர்? மக்களை முட்டாள்கள் ஆக்கும் அரசியல் கலாச்சாரத்தினை தொடர்ந்தும் மேற்கொள்ளாதீர்கள் என அவர்களை நோக்கிக் கேட்கின்றோம்.
மக்களை நாட்டின் அரச நிறுவனங்கள் மீது நம்பிக்கையற்றவர்களாக அரசியல் இலாபங்களுக்காக வழிநடத்தாதீர்கள். எவராவது எமது மன்றங்களின் செயற்பாடுகளில் ஊழல் சந்தேகம் நிலவுமாயின் அதுபற்றி நடவடிக்கை எடுங்கள். வேண்டுமாயின் நானே உங்களுக்கு உதவத்;;தயார். ஊழல்கள் இருந்தால் நிரூபியுங்கள் என்பதை பகிரங்க சவலாக விடுகின்றேன்.