சேவை நலன் பாராட்டி கௌரவம்

பைஷல் இஸ்மாயில் -
நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையில் பல வருடங்களாக சேவையாற்றி இடமாற்றம் பெற்றுச் சென்றவர்களையும், புதிதாக இடமாற்றம் பெற்று வந்தவர்களையும், சேவை செய்கின்றவர்களின் சேவை நலன் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு குறித்த வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கல்முனை பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளரும் நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான வைத்திய கலாநிதி எம்.ஏ.நபீல் தலைமையில் நேற்று (31) இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன், பிராந்திய தொற்று நோய்த்தடுப்பு வைத்திய பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி நாகூர் ஆரிப், பிராந்திய திட்டமிடல் பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி எம்.சீ.எம்.மாஹிர், பிராந்திய கணக்காளர் ஐ.எம்.பாரீஸ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின்போது, குறித்த வைத்தியசாலையிலிருந்து இடமாற்றம் பெற்றுச் சென்ற மற்றும் இடமாற்றம் பெற்றுவந்த உத்தியோகத்தர்களையும், வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஆகியோர்களின் சேவையை பாராட்டி ஞாபகச் சின்னம் அதிதிகளினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதேவேளை, குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளும் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மற்றும் வைத்தியர்களினால் ஞாபகச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.





 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -