சிங்கள தேசிய வாதத்தினுள் சிறுபான்மையினரை அடக்கி ஒதுக்கும் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பித்துள்ளது-றிஷாட் பதியுதீன்


அஸீம் கிலாப்தீன்-

பிள்ளைகளின் பாடசாலை கல்வியிலே பெற்றோர்கள் அக்கறை செலுத்தவேண்டும்.இந்த பிரதேசத்தை சேர்ந்த மாணவி முதலிடம் பெற்றிருப்பதானது இந்த சிலாவத்துறை பாடசாலைக்கும் முசலி பிரதேசத்திற்கும் ஒரு கௌரவமாக நான் பார்க்கின்றேன்..

20 வருடங்கள் இந்த பிரதேசத்தில் இந்த பிரதேசத்தில் கல்விநடவடிக்கைகளை செய்ய முடியவில்லை, வாழமுடியவில்லை,இவ்வாறு இருந்த பிரதேசத்தில் மீள் குடியேறி குறுகிய காலத்தினுள் கல்வி வளர்ச்சி ஓரளவு வேகத்தில் சென்று கொண்டிருப்பதை காணமுடிகிறது. அதனுடைய வெளிப்படையான தெளிவுதான் சிலாவத்துறை மாணவியின் பெறுபேறாகும்.இந்த மாணவி போன்று ஏனைய மாணவ, மாணவிகளும் கற்கவேண்டும்.உயர் பெறுபேறுகள் பெறவேண்டும்,சாதனைகள் புரியவேண்டும்.அதுதான் எங்களின் எதிர்பார்ப்பு.

இந்த பிரதேசத்தில் பாடசாலை மாடிக்கட்டிடங்கள்,பாதைகள்,வீடுகள்,வேலைவாய்ப்புகள், என்று பல அபிவிருத்தி திட்டங்களை கடந்தகாலங்களில் நாங்கள் செய்துள்ளோம்.பூச்சியத்தில் இருந்து எல்லாம் ஆரம்பித்தோம்.இந்த பிரதேசம் காடாக தான் இருந்தது.நாம் இங்கு வாழவில்லை.இன்னொரு பிரதேசத்தில் தான் வாழ்ந்தோம் இன்று எமது பிரதேசத்தில் குடியேறி ஒன்றன்பின் ஒன்றாக இந்த விடங்களை சாதித்துள்ளோம்.அல்லாஹ்வின் உதவியாலும் மக்கள் தந்த அரசியல் பலத்தினாலும் இந்த கடமையை ஆற்றிவருகின்றோம்.

இன்று எங்களுக்கு முன்னாள் இருக்கின்ற சவால் சிங்கள தேசிய வாதம் அதாவது சிறுபான்மை அடக்கி ஓதுகின்ற ஒரு நடைமுறையான செயற்பாடு அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.சில தினங்களுக்கு முன்னர் ஒரு பள்ளிக்கு முன்னாள் சிலையை கொண்டு வைத்தார்கள். சிலை வைப்பது தவறல்ல பள்ளிகளுக்கு முன்னாள் சிலைவைப்பது தவறு என்று சொல்கின்றோம்.கலவரத்தை தூண்டும் விடயமும் கூட ஒரு பிரச்சினையை ஏற்படுத்துவதற்காக முஸ்லிம் இளைஞ்சர்களை வம்புக்கு இழுப்பதற்கான சதி நடக்கிறது இது தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கையாகும்.

எனவே இவ்வாறு ஒன்றை செய்வதை நாங்கள் அனுமதிக்க முடியாது நாங்கள் அமைதியாக இருக்கவேண்டும் வேண்டும் என்று ஆட்சியை கொண்டுவந்தவர்களும்,ஆட்சியின் பங்களிகளும்,ஆட்சியாளர்களும் நினைக்கிறார்கள். அதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்காமல் தட்டிக்கேற்பதனால் எங்களை தட்டி சிறைப்படுத்த சிலர் முயற்சிக்கின்றார்கள். சில தினங்களுக்கு முன்னாள் என்னை குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை செய்தர்கள் எனக்கு எந்த குண்டுவெடிப்புடனும் தொடர்பில்லை என்று பொலிஸ்மா அதிபர் பாராளுமன்றத்திற்கு எழுத்துமூலமாக கொடுத்துள்ளார்.இது தொடர்பில் விசாரிப்பது அரசியல் தூண்டுதல்கள் ஆகும் அப்படி கொடுத்தும் கடந்த தேர்தலில் நாம் ஆதரித்த வேட்பாளர் தோல்வியுற்றார் அதற்காக முஸ்லிம்களின் உரிமை விடயத்தில் பகுபடுபார்ப்பது நல்ல ஆரோக்கியமான செயற்பாடாக இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

முசலிப்பிரதேச பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் #முசலி பிரதேசபை தவிசாளர் சுபியான் , பிரதி தவிசாளர் முகுசீன் ரயீசுதீன் உட்பட மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -