இடமாற்றம்பெறும் சகல ஆசிரியர்களுக்கான கடிதங்கள் வலயங்களில்.


வலயக்கல்விப்பணிப்பாளர்களுக்கு நேர்முகம் இடம்பெறும்வரை இடமாற்றம்நிறுத்தம்!
காரைதீவு நிருபர் சகா-

கிழக்கு மாகாணத்தில் இடமாற்றம் பெற்றுள்ள ஆசிரியர்களுக்கான இடமாற்றக்கடிதங்கள் அந்தந்த வலயங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அதன்பிரகாரம் குறித்த ஆசிரியர்கள் அதனைப்பெற்று ஜனவரி 2முதல் புதிய பாடசாலைகளில் கடமைகளை பொறுப்பேற்கவேண்டுமென கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தெரிவித்தார்.
இடமாற்றம்பெற்ற ஆசிரியர்களது விபரம் மாகாணக்கல்வித்திணைக்கள இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது தெரிந்ததே.

அவர்களுக்கான மேன்முறையீடுகளும்ஆசிரிய தொழிற்சங்கப்பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற பரிசீலனையின்பின்னர் புதிய பட்டியல் வெளியாகியுள்ளது.
இதேவேளை இடமாற்றத்தின்போது ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்ட மட்டு.மேற்கு கல்குடா போன்ற வலயங்களுக்கான பதில் ஆசிரியர்கள் பட்டியலும் தயார்படுத்தப்பட்டு அவர்களுக்கும் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இதுஇவ்வாறிருக்க அதிபர்களின் மேன்முறையீடும் பரிசீலிக்கப்பட்டுள்ள.ன அவர்களுக்கான இடமாற்றக்கடிதங்கள் மாகாண கல்வியமைச்சால் அனுப்பப்படும். அதேபோன்று இலங்கை கல்வி நிருவாகசேவை உத்தியோகத்தர்களுக்கான மேன்முறையீடும் பரிசீலிக்கப்பட்டு இடமாற்றக்கடிதங்களும் அனுப்பப்பட்டுள்ளன.

ஆனால் வலயக்கல்விப்பணிப்பாளர்களை நியமிப்பதற்கான நேர்முகப்பரீட்சை கொழும்பில் கல்விப்பணிப்பாளர்களுடன் கல்வியமைச்சர் ஒரு கலந்துரையாடலை நடாத்தியதன்காரணமாக குறித்த தினத்தில் நடைபெறவில்லை. ஆதலால் வலயக்கல்விப்பணிப்பாளர்களுக்கான இடமாற்றம் தற்போது இடம்பெறாது. நேர்முகத்தின்பின்னரே அவர்களது இடமாற்றம் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி புதிய தவணையின்ஆரம்பத்தில் கிழக்கின் 17கல்வி வலயங்களலும் அதே வலயக்கல்விப்பணிப்பாளர்களே சேவையில் தொடர்ந்திருப்பார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -