உங்கள் அனைவருக்கும் இனிய தைபொங்கல் வாழ்த்துக்கள். உழவர் திருநாளான தைத்திருநாளினை மலையக மக்கள் இன்று சிறப்பாக கொண்டாடினர்.

ஹட்டன் கே. சுந்தரலிங்கம் -
ழவர் திருநாளான தை பெருநாளினை உலகெங்கும் வாழும் இந்துக்கள் இன்று(15) கொண்டாடிவருகின்றனர்.இந்த தைதிருநாளினை முன்னிட்டு மலையக ஆலங்களில் அன்று முதல் இன்று வரை எமக்கு உணவளித்த இயற்கை கடவுளான சூரியனுக்கு நன்றி செலுத்தும் முகமாக சிறப்பு பூஜைகள் இடம்பெற்றன.
'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.'
என்பது வள்ளவரின் வாக்கு தமிழர் பண்பாடுகளில் தமது வாழ்வாதாரத்திற்கு உதவி புரிந்த இயற்கை கடவுளாகி சூரிய பகவானுக்கும்,தமது வேளாண்மைக்கும் வாழ்வாதாரதிற்கும் உதவி புரிந்த அனைத்தையும் நினைவு கூறும் நாளே தைத்திருநாள். இந்த நாளான இன்று (15) ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் வாசலில் கோளமிட்டு குத்துவினக்கேற்றி பொங்கல் படைத்து சூரிய பகவானுக்கு சிறப்பு பூஜைகள் இடம்பெற்றன.
அதனை தொடர்ந்து ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையாருக்கு விசேட பூஜைகள் இடம்பெற்றன.
பூஜை வழிபாடுகள் ஆலய பிரதம குரு பிரம்ம ஸ்ரீ சந்திராநந்த சர்மா அவர்களின் தலைமையில் இடம்பெற்றன.
இதில் ஏராளமான தமிழ் சிங்கள பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.
இந்த தைப்பொங்கலை முன்னிட்டு வீடுகளிலும் கரும்பு, வாழை மாவிலை ஆகின வாசலில் கட்டி வாசலில் பொங்கல் வைத்து சூரியனுக்கு நன்றி செலுத்தினர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -