அரசியலில் இருண்ட யுகத்திலிருந்து சாய்ந்தமருதை மீட்டெடுக்க சலீம் களமிறங்குகிறார்!!!ஜும்மா பள்ளிவாசல் தலைவர் பகிரங்க அறிவிப்பு...

அலுவலக செய்தியாளர்-
நீண்ட பாரம்பரியங்களைக் கொண்ட சாய்ந்தமருது அரசியலில் மட்டும் மற்றவர்களுக்கு தலைகுனியும் நிலையிலேயே இருந்து வருகின்றது. எங்களுக்காக பாராளமன்றத்தில் பேசக்கூடிய குரல் இல்லாததால் அபிவிருத்தி உள்ளிட்ட அனைத்துமே கிடப்பில் போடப்பட்டுள்ளன. இவைகளை முன்னிலைப்படுத்தி செய்யக்கூடியவர் சலீம் அவர்களே. என சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனீபா தெரிவித்தார்.

சாய்ந்தமருது நகரசபை இலக்கை அடையும் நோக்கில் போராடி வரும் குழுவினரின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது மண்ணின் மாற்றம் மற்றும் அபிவிருத்திக்கான மையம் என்ற அமைப்பை அங்குராப்பணம் செய்துவைக்கும் நிகழ்வு சாய்ந்தமருது கல்யாண வீதியில் 2020.01.05 ஆம் திகதி இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே வை.எம். ஹனீபா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்வுதய நிகழ்வில் கல்முனை தொகுதி வேட்பாளராக சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் சாய்ந்தமருது பிரதேச செயலாளரும், இலங்கை நிர்வாக சேவை அதிகாரியுமான ஏ. எல். எம். சலீம் போட்டியிடுவார் என சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனீபா அவர்களினால் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது.

தேசிய நல்லிணக்கம், சகவாழ்வை அடிப்படையாக கொண்டும், நிலையான அபிவிருத்தி புதிய அரசின் கோட்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டும் பிரதேச மக்களின் ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்பி பல்லின சமூக அமைப்பில், சமூக இருப்பையும் அபிவிருத்தியையும் குறிக்கோளாகக் கொண்டு "சமூக மாற்றம் மற்றும் அபிவிருத்திக்கான மய்யம்" என்ற தொனிப் பொருளிலான அமைப்பு அமையவுள்ளது.

இந்நிறுவனத்தின் ஆரம்ப நிகழ்வுக்கு சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனீபா பிரதான அதிதியாக கலந்து கொண்டார். சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜூம்மா பள்ளிவாசல் நிர்வாகத்தினர், உலமாக்கள்,கல்முனை மாநகர சபை சுயேட்சைக் குழு உறுப்பினர்கள், புத்திஜீவிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -