தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்தின் ஏற்பாட்டில், பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் தலைமையில் கலைப் பிரிவு மாணவர்களின் 3வது ஆய்வரங்கு 2020.01.22 ஆம் திகதி கலை கலாச்சார பீடத்தின் கேட்ப்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நஜீம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். ஆய்வரங்கின் விஷேட பேச்சாளராக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் முதுநிலை கலாநிதி சாமர வெற்றிமுனி கலந்துகொண்டு விஷேட உரையாற்றியதுடன் மாணவர்களின் ஆய்வுக்கட்டுரை விவாதங்களிலும் பங்குகொண்டார்.
ஆரம்ப நிகழ்வின்போது வரவேற்புரையை இணைப்பாளர் சி.எம்.எம்.மன்சூர் நிகழ்த்திய அதேவேளை செயலாளர் என். சுபராஜ் நன்றியுரை நிகழ்த்தினார். குறித்த ஆய்வரங்கில் 110 கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படடன. ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய நூல்கள் பிரதம அதிதிக்கு விஷேட பேச்சாளருக்கும் நிகழ்வின் தலைமைக்கும் உத்தியோக பூர்வமாக வழங்கி வைக்கப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வின்போது நூலகர், பேராசிரியர்கள், துறைகளின் தலைவர்கள், சிரேஷ்ட கனிஷ்ட்ட விரிவுரையாளர்கள் ,நிர்வாக உத்தியோகத்தர்கள் கல்விசார் உத்தியோகத்தர்கள் மாணவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.