புதிய வருடம் பிறந்து சற்றுநேரத்தில் மட்டக்களப்பு- செங்கலடி பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற கைகலப்பில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகை அலங்கார நிலையமொன்றின் கண்ணாடிகள் அடித்து நொருக்கப்பட்டள்ளதுடன் இலத்திரனியல் கருவியொன்றும் திருடப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப்பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.
அவ்விடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டர்ர சைக்கிள் ஒன்று கேமடைந்துள்ளது.
சட்டவிரோத மணல் அகழ்வினால் ஏற்பட்ட முரண்பாடு கைகலப்பாக மாறியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உதவியாளர் ஒருவர் மதுபோதையுடன் வந்து தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவருக்குச் சொந்தமான செங்கலடி எல்லை வீதியிலுள்ள கட்டடத்தில் இயங்கிவந்த சிகை அலங்கார நிலையத்தின்மீது தாக்கிதையடுத்து கைகலப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதிலிருந்து சற்றுநேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அவ்விடத்திற்கு வருகைதந்து திரும்பிச் சென்றதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகின்றது.
மதுபோதையுடன் வந்த நபர் சிகை அலங்கார நிலையத்தின் கண்ணாடிகளை கைகளினால் உடைத்ததனால் அவரின் உடலில் கண்ணாடி வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.
அதிகாலை 12.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஏறாவூர்ப் பொலிஸார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கே. மோகன் இதுகுறித்து ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு தெரிவித்துள்ளார்.