கிண்ணியா பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் கிளை நிலையங்களான கூட்டுறவு கிராமிய வங்கி மற்றும் பூட் சிட்டி என்பன திறந்து வைக்கப்பட்டன
குறித்த திறப்பு விழா வைபவமானது இன்று (31) கிண்ணியா ஆலங்கேணியில் திறந்து வைத்து மக்கள் சேவைக்காக விடப்பட்டது
கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் எம்.எஸ்.எம்.சரீப் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இதனை திறந்து வைத்தார்
உரிய கிளைகளானது ஆலங்கேணி மக்களின் நலன் கருதி திறந்து வைக்கப்பட்டுள்ளது
இதில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி,திருகோணமலை மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வேல்வேந்தன்,கிண்ணியா நகர சபை உறுப்பினர்களான எம்.எம்.மஹ்தி,பஞ்சலிங்கம் உட்பட பொலிஸ் அதிகாரி, பொது மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.