ஆர்ப்பாட்டம் ரத்து:பெண்ஊழியர் மட்டக்களப்புவைத்தியசாலைக்குமாற்றம்!
காரைதீவு நிருபர்சகா-பெண் ஊழியரொருவருக்கு அறைந்த தலைமை உத்தியோகத்தர் இன்று(6)திங்கள் அதிகாலை கைதுசெய்யப்பட்டிருப்பதாக சம்மாந்துறைப்பொலிஸார் தெரிவித்தனர்.
அவரை சம்மாந்துறை நீதிவான்நீதிமன்றத்தில் நேற்று ஆஜராக்குவதற்கும் பொலிசார் ஏற்பாடு செய்திருந்தனர்.
நிந்தவூர் கமநல கேந்திரமத்திய நிலையத்தில் பணியாற்றும் நிலைய முகாமைத்துவ உதவியாளர் திருமதி தவப்பிரியா சுபராஜ்(வயது34) என்பவருக்கு அந்நிலையத்தின் தலைமை கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜ.எல்.ஏ.கார்லிக் என்பவர் கன்னத்தில் ஓங்கி அறைந்த சம்பவம் தெரிந்ததே.
தாக்கிய உத்தியோகத்தரைக்கைது செய்யவேண்டுமென அரசியல்வாதிகளும் பெண்ணுரிமை பேணும் அமைப்புகளும் போர்க்கொடி தூக்கியிருந்தன.
அதன்படி சம்மாந்துறைப்பொலிசார் சல்லடைபோட்டுத்தேடினர்.அவர் நிந்தவூரிலுள்ள வீட்டில் இல்லாமல் தலைமறைவாகியிருந்தார்.
இன்றையதினம் அவர் வருகையில் சம்மாந்துறைப்பொலிசார் சூட்சுமமாகக் கைதுசெய்துள்ளனர்.
ஆர்ப்பாட்டரம் ரத்து!
சம்பந்தப்பட்ட நபர் இன்று (திங்கள்) வரை கைதுசெய்யப்படாவிட்டால் இன்று பெண்ணுரிமை அமைப்புகள் ஆர்ப்பாட்டத்திலீடுபட சகல ஏற்பாடுகளையும் செய்திருந்தன.
ஆனால் அவர் கைது செய்யப்பட்டதையடுத்து நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டங்கள ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறைப்பொலிஸ் நிலையத்தின் புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி சுரந்த ஜயலத் எடுத்த முயற்சிக்கு காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் நேரில்சென்று பாராட்டுத்தெரிவித்தார்.
இச்சம்பவத்தினால் ஏற்படவிருந்த இனமுறுகல் நிலைமையினைத் தடுத்ததுடன் சட்டத்தினை துரிதமாக நிலைநாட்டியமைக்காக தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பிற்கு இடமாற்றம்!
இதேவேளை கல்முனை ஆதாரவைத்தியசாலையில் கடந்த 5நாட்களாக சிகிச்சைபெற்றுவந்த தாக்குதலுக்குள்ளான பெண்ஊழியர் தவப்பிரியா மேலதிக சிகிச்சைக்காக நேற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.