சிப்லி பாரூக்கின் முயற்சியில் காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு மின் உயர்த்தி (LIFT) -பாராட்டும் கக்கள்

எம்.ரீ. ஹைதர் அலி 
-

பொறியியலாளர் சிப்லி பாரூக்கின் முயற்சியில் காத்தான்குடி தள வைத்தியசாலைக்கான மின் உயர்த்தி (Lift) நிர்மாணப் பணிகள் இறுதிக்கட்டத்தில் - பொதுமக்கள் நன்றி தெரிவிப்பு

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாரூக்கின் முயற்சியில் காத்தான்குடி தள வைத்தியசாலைக்கான லிப்ட் நிர்மாணப் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்ற நிலையில் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.

அனைத்தினங்களையும் சேர்ந்த அதிகளவிலான நோயாளிகள் காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வருகின்ற நிலையில் வைத்தியசாலையின் மிக நீண்ட நாள் தேவையாக இருந்து வந்த மின்னுயர்த்திக்கான (Lift) வேலைப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது பூர்த்தியாகும் நிலையில் இருக்கின்றன.

காத்தான்குடி தள வைத்தியசாலையை பொறுத்தமட்டில், இவ் வைத்தியசாலையின் இரண்டாம் மாடியில் சத்திர சிகிச்சைக் கூடம் மற்றும் பிரதான விடுதிகள் (WARD) இருப்பதன் காரணமாக நோயாளிகள் அந்த இடத்திற்கு சாதாரண படிகளின் ஊடாக ஏறிச் செல்வது அல்லது சாய்வுகளினூடாக அவர்களை உரிய விடுதிகளுக்கு கொண்டு செல்வதானது, மிகப் பாரிய சிரமமாக காணப்பட்டு வந்தது.

இதன் அடிப்படையில் மேற்படி விடயம் பற்றி முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாரூக் அவர்களிடம் முன்மொழியப்பட்டிருந்த போது, இதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் எடுத்ததற்கமைய முன்னால் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் அவர்களிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சுமார் ஒரு கோடி முப்பது இலட்சம் ரூபா பெறுமதியான நிதி ஒதுக்கீட்டினை செய்ததன் மூலம் ஒரே நேரத்தில் 21 பேர் பயணிக்கக் கூடிய 'நவீன வசதியுடனான மின்னுயர்த்தி (Lift) பொருத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

மேற்படி நிர்மாணப் பணிகளை பார்வையிடுவதற்காக முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு 2020.02.04ஆம் திகதி - சனிக்கிழமை விஜயம் மேற்கொன்டிருந்தார்.

இவருடன் காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம். ஜாபிர், கட்டட திணைக்கள பொறியியலாளர் நுஸ்கி, காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான மர்சூக் அஹமட் லெப்பை, ஏ.எம். அலி அக்பர் உப்பட மேலும் பலரும் சமூகமளித்திருந்தனர்.

மேலும் இம்மின்னுயர்த்திக்கான பணிகள் மிக விரைவில் பூர்த்தி செய்யப்பட்டு நோயாளிகள், பொதுமக்கள் பாவனைக்கு விரைவில் கையளிக்கப்பட இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -