பொய் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நசீர் MP !


எம்.எம்.நிலாம்டீன்-
சீர் MP அதாவுல்லாஹ்வுடன் இணையப் போகின்றார் கட்சி மாறப்போகின்றார் என்று கடந்த வாரமாக உள்ளூரில் மக்கள் மத்தியில் ஒரு புரளி பரவி வருகின்றது .

இது குறித்து தொலைபேசியில் நசீர் MP யிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது பொய்யான வதந்தி ஒன்றை அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு எதிர் அணியினர் பரப்பி வருகின்றார்கள் என்று நினைக்கின்றேன் என்றார்.
எனது தாய் வீடு > எனது அரசியல் பிரவேசம் >எனது அரசியல் வளர்ச்சி >நான் கண்ட சிம்மாசனம் முஸ்லிம் காங்கிரஸ் .

என்னோடு எனக்கு வாக்களித்த மக்கள் உள்ளார்கள்.அவர்களை நான் உதாசீனம் செய்ய முடியாது என்றார்.

எனவே எனக்கு கட்சி மாற வேண்டிய தேவையோ அவசியமோ ஒரு போதும் இல்லை என்று ஆணித்தரமாக தெரிவித்தார்.

எமது அவதானம் :
எதிர்வரும் பொது தேர்தலில் நசீர் MP க்கு வேட்பாளர் டிக்கட் வழங்க கூடாது என்ற உள்நோக்கில் நிந்தவூர் மகாராசா அணியினர் அட்டாளைச்சேனையில் அள்ளி விட்ட இல்லை விஷம் விதைத்த புரளிதான் நசீர் MP கட்சி தாவுகின்றார் என்ற புரளியை எடுத்து விட்டுள்ளார்கள் என்பதை நன்கு அறிய முடிகின்றது .
இதேவேளை நசீர் MP எதிர்வரும் பொது தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக களமிறங்கினால் நிந்தவூர் பைசல் காசிம் MP பின்னடைவு அடைவார் . மற்றும் அவரது வாக்கு வங்கி நிந்தவூர் ஒலுவில் பாலமுனை அட்டாளைச்சேனை ஆகிய இடங்களில் வீழ்ச்சி காணும் என்பது யதார்த்தம் .

அதனால் எதிர்வரும் பொது தேர்தலில் நசீர் MP க்கு வேட்பாளர் டிக்கட் கொடுக்க கூடாது என்ற உள்நோக்கில் சில புல்லுருவிகள் இப்படியான புரளிகளை எடுத்து விடுகின்றார்கள்..
அதேநேரம் நசீர் MP க்கு வேட்பாளர் டிக்கட் கொடுக்க கூடாது என்ற வில்லங்கத்தில் நிந்தவூர் பைசல் காசிம் MP யின் ஆதரவாளர்கள் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமிடம் அழுத்தம் கொடுத்து வருவதாக ஒரு தகவல் உள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -