இவ்வாறான இந்த நிலையில், தற்பொழுது அம்பாறை மாவட்டத்தில் பாராளுமன்றத்தினை பிரதி நிதித்துவப்படுத்தும் ஹரிஸ், மன்சூர், பைசல் காசிம், நசீர், விசி.இஸ்மாயில் ஆகியோர்களின் அரசியல் இருப்பானது கேள்விக்குறியாகியுள்ள நிலைமையும், அவைகள் தொடர்பான பரவலான அலசல்களும் மாவட்டத்தில் முடிக்கி விடப்பட்டுள்ள சமகால அரசியல் களமாக மாற்றமடைந்துள்ளது.
மேலும்…..தனது சொந்த நிதியினை கொண்டு பல வருடங்களாக மேற்கொண்டு வரும் சமூக சேவையினூடாக தனக்கென மாவட்டத்தில் பரவலாக எல்லா பிரதேசங்களிலும் மக்கள் செல்வாக்கினை கொண்டுள்ள பொறியியலாளர் நாபீர், குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறையில் களமிறங்க முடிவெடுத்துள்ள காரணத்தினால் அப்பிரதேசத்தினை மையப்படுத்தி தற்பொழுது பாராளுமன்றத்தினை பிரதி நித்துவப்படுத்தும் மன்சூர் மற்றும் விசி.இஸ்மாயில் ஆகியோர்கள் தங்களுடைய எதிர்கால பாராளுமன்ற உறுப்புரிமையானது எதிர்காலத்தில் கேள்விக்குறியாகலாம் என்பதில் கதிகலங்கிப்போய்யுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் உறுதிபடுத்துவதாகவும் உள்ளது.
குறித்த விடயம் சம்பந்தமாக பொறியியலாளர் நாபீரை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது…., அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைமையுடனும், தவிசாளர் அமீர் அலியுடனும் நெருங்கி உறவினை பேனுவதினால் அகில இலங்கை மக்கள் காங்கிரசினுடைய சமூகத்துக்கான தேவைப்பட்டினை எல்லோரும் உணர்ந்து செயற்பட வேண்டிய கடமைப்பாட்டில் இருக்க வேண்டிய யதார்த்தத்தினை தான் நன்குணர்ந்தவனாக தனது காய் நகர்த்தல்களை மெற்கொண்டு வருவதாகவும், தான் எந்த கட்சியில் அம்பாறையில் களமிறங்கினாலும் தனது வெற்றியானது ஏற்கஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஒரு விடயமாக உள்ளது எனவும் தெரிவித்தார்.