தி- கிண்ணியா ரீ.பி.ஜாயா மகளிர் மகா வித்தியாலயத்தில் கடந்த 2019 ஆண்டில் தரம் -05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மூன்று மாணவிகளை கிண்ணியா மக்கள் வங்கி கிளையினரால் தங்கப் பதங்கம் அணிவித்து கௌரவிக்கும் நிகழ்வு (17) இடம் பெற்றது.
கடந்த வருடம் இப் பாடசாலையிலிருந்து ரீமாஸ் -181 புள்ளிகளும், அயானா -169 புள்ளிகளுமான், யூஸ்ரா 151 புள்ளிகளும் பெற்று சித்தியடைந்திருந்தனர்.
கிண்ணியா ரீ.பி.ஜாயா மகளிர் மகா வித்தியாலய அதிபர் எம்.எம்.முஸம்மில் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கிண்ணியா மக்கள் வங்கி கிளை முகாமையாளர் கே.எம்.அமீர்தீன் வழங்கி வைத்தார்.